பிக்பாஸ் நடிகரின் வீட்டில் நடந்த சோகம்... ஆறுதல் கூறும் ரசிகர்கள்!...
இன்று உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டிருக்கும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி முதலில் ஆரம்பிக்கப்பட்ட போது, அதில் கலந்து கொண்டு வெற்றிவாகை சூடியவர் ஆரவ். ஓவியாவிற்கு மருத்துவ முத்தம் கொடுத்து அந்த நிகழ்ச்சியின் டிஆர்பியை, நெக்ஸ்ட் லெவலுக்கு கொண்டு சென்ற பெருமையும் இவரையே சேரும்.
வெளியில் வந்து சின்னச்சின்ன வேடங்களில் நடித்து தற்போது தனக்கென ஒரு பெயரை தக்கவைத்துக் கொண்டுள்ளார். 'கலகத்தலைவன்' படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட, ரசிகர்களின் பேவரைட் நடிகர் அஜித்குமாரின் 'விடாமுயற்சி' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
அவ்வப்போது அஜித் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வதால் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இந்தநிலையில் அவரின் வீட்டில் ஒரு மிகப்பெரிய துக்கம் நடந்துள்ளது. ஆரவ் தனது சகோதரர் நதீமை இழந்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில், "என்னுடைய சகோதரர் நதீம் இன்று மாலை (நவம்பர் 2) 4 மணிக்கு உயிரிழந்தார். அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்," என துக்கத்துடன் ஆரவ் அறிவித்து இருக்கிறார்.
இதைப்பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் அவருக்கு தங்களது ஆறுதலை கூறி இறந்த நதீமின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். பிக்பாஸ் சீசன் முதல் நிகழ்ச்சியில், சகோதரர் நதீம் குறித்து ஆரவ் பகிர்ந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது