அஜித்த எதிர்பார்த்தா இது ஆரவ்டா!.. மீண்டும் மொக்கை போஸ்டரை வெளியிட்ட ‘விடாமுயற்சி’ டீம்!...
அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. தற்போது ஹைதராபாத்தில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கின்றது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே படப்பிடிப்பு எஞ்சி இருக்கும் நிலையில் படத்தின் ஒவ்வொரு போஸ்டரையும் அடுத்தடுத்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் படக்குழு.
ஏற்கனவே மூன்று போஸ்டர்கள் வெளியான நிலையில் இன்று விடாமுயற்சி படத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகி இருக்கிறது. படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து அர்ஜுன், ஆரவ் போன்ற பல முக்கிய நடிகர்களும் நடித்திருக்கின்றனர்.
கடைசியாக அர்ஜுன் சம்பந்தப்பட்ட போஸ்டர் வெளியான நிலையில் இன்று ஆரவ் இருக்கும் மாதிரியான போஸ்டர் வெளியாகி இருக்கிறது. ஒரு ஜீப்பில் ஆரவ் ஸ்டைலிஷாக உட்கார்ந்து இருக்கும் மாதிரியான அந்த போஸ்டர் இன்று வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.
ஆனால் இந்த போஸ்டரை பார்த்த பலரும் இது ஆரவ்தானா? இல்லையா என்றும் கேட்டு வருகின்றனர். ஏனெனில் இந்த போஸ்டர் வெளியான நிலையில் அது யார் என்றே தெரியாத வகையில் அந்த போஸ்டர் அமைந்திருக்கின்றது. படம் எப்படியும் இந்த வருடம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு வேளை தீபாவளி அன்று ரிலீஸ் ஆனால் தல தீபாவளி, தல பொங்கல் என ரசிகர்களுக்கு அடுத்தடுத்து ஒரு பெரிய ட்ரீட் காத்துக் கொண்டிருக்கின்றது என்று சொல்லலாம். ஏனெனில் இந்த படத்திற்கு பிறகு அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடித்து வருவதால் அந்தப் படம் அடுத்த வருடம் பொங்கல் அன்று ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
அதனால் விடாமுயற்சி படத்தை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் அஜித் இருப்பதால் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.அதுவும் ஒரே நேரத்தில் இரு படத்தின் படப்பிடிப்புகளிலும் அஜித் நடித்துக் கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.