கட்டவண்டி.. கட்டவண்டி! குடும்பத்தை மாட்டு வண்டியில் அடித்து ஓட்டிச் செல்லும் அர்ஜூன்.. கண்கொள்ளா காட்சி

by ராம் சுதன் |

ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் தன் குடும்பத்தை மொத்தமாக மாட்டுவண்டியில் வைத்து ஓட்டிச் செல்லும் வீடியோதான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 90கள் காலகட்டத்தில் ஒரு முன்னணி நடிகராக இருந்தவர் அர்ஜூன். பெரும்பாலும் இவருடைய படங்களில் ஆக்‌ஷனுக்கு பஞ்சமே இருக்காது. கராத்தேவில் கைதேர்ந்தவராக விளங்கினார் அர்ஜூன்.

அதனாலேயே ஆக்‌ஷன் கிங் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரரானார். அதுமட்டுமில்லாமல் நாட்டுப்பற்று மிக்க காட்சிகளும் அவர் படங்களில் நிறையவே இருக்கும். அவர் ஏற்று நடித்த பெரும்பாலான கேரக்டர் போலீஸ் கதாபாத்திரமாகவே அமைந்திருக்கிறது. இப்படி ஒரு டாப் ஹீரோவாக வலம் வந்த அர்ஜூன் சமீபகாலமாக வில்லனாக பல படங்களில் நடித்து மாஸ் காட்டி வருகிறார்.

சமீபத்தில் கூட லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக ஹரோல்டு தாஸ் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். அந்தப் படத்தில் தெறிக்க என்று சொல்லும் வசனம் அவருக்கு மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்தியது. இப்போது கூட அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்திலும் அர்ஜூன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வில்லனாக மட்டுமில்லாமல் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகிறார் அர்ஜூன். சமீபத்தில்தான் அர்ஜூனின் மகள் திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா நடிகர் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதியை காதலித்து வந்தார்.

இருவீட்டாரின் சம்மதத்துடன் சென்னையில் அர்ஜூனுக்கு சொந்தமான அனுமன் கோயிலில் பிரம்மாண்ட செட் போட்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு வரவேற்பு நிகழ்ச்சி என ஒரு வார காலம் அர்ஜூன் வீடு களை கட்டியது.

இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அர்ஜூன் மாட்டு வண்டியை ஓட்டிக் கொண்டு வருகிறார். அவருக்கு பின்னாடி அந்த மாட்டு வண்டியில் அவருடைய இரு மகள்களும் உமா பதியும் உட்கார்ந்து ஜாலி செய்து கொண்டு வருகிறார்கள். அந்த காலத்தில் உள்ளது போல் தலைப்பாகை அணிந்து மாட்டு வண்டி ஓட்டி வருகிறார் அர்ஜுன்.

இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/C-Sq2uJvy4e/?igsh=MWhtOXdscTE0Y2I0dw==

Next Story