நான் 8ம் வகுப்பு வரை பாஸ் செஞ்சிருக்கேனா அதுக்கு காரணம் தனுஷ்தான் ! பிரபலம் சொன்ன ஷாக் தகவல்
தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ் ஆரம்பத்தில் நடிக்கவே பிடிக்காமல்தான் இந்த சினிமாவிற்குள் வந்திருக்கிறார். இருந்தாலும் முதல் படத்தின் வெற்றி அவரை ‘சரி. இவ்ளோ தூரம் வந்தாச்சு. இன்னும் என்ன நடந்தாலும் சமாளிப்போம்’ என்ற வகையில்தான் அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.
பல விமர்சனங்களை கடந்து இன்று ஒரு பெரிய சாதனை படைத்த நடிகராக மாறியிருக்கிறார். இந்த இள வயதில் தேசிய விருதை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். சமீபகாலமாக அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் மக்களை மிகவும் திருப்தி படுத்துபவையாகவே அமைந்து வருகின்றன.
ஒரு தயாரிப்பாளராக இயக்குனராக நடிகராக இன்று ஒரு பன்முக திறமைகள் கொண்ட கலைஞராக மாறியிருக்கிறார் தனுஷ். இன்று அவர் நடித்த ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிலையில் நானும் தனுஷும் ஒன்றாக ஒரே வகுப்பில் படித்தவர்கள்தான் என பிரபல டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் கூறியிருக்கிறார். அதாவது பாபா பாஸ்கருக்கு முன் இருக்கையில்தான் தனுஷ் அமர்ந்திருப்பாராம். படிப்பில் மிகவும் கெட்டிக் காரராம் தனுஷ்.
எட்டாம் வகுப்பில் நான் பாஸ் ஆகியிருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் தனுஷ்தான். தெரியாததை பரீட்சை நேரத்தில் சொல்லிக்கொடுப்பார். அதனால் படிப்பைப் பற்றி நான் கவலைப் படமாட்டேன். விளையாட்டில் ஆர்வமாகி விட்டேன் என்று பாபா பாஸ்கர் கூறினார். மேலும் டான்ஸ் குரூப்பில் இருந்த நான் இன்று ஒரு பெரிய டான்ஸ் மாஸ்டர் ஆகியிருக்கிறேன் என்றாலும் அதற்கும் காரணம் தனுஷ் தான் என்று பாபா பாஸ்கர் கூறினார்.