ஆக்ரோஷ நடிகருடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் ராயன்! ஆசையை நிறைவேற்றுவாரா வெற்றிமாறன்?
தனுஷ் தன்னுடைய 50வது படமான ராயன் திரைப்படத்தின் புரோமோஷனில் பிஸியாக இருந்து வருகிறார். இரண்டாவது முறையாக தானே இயக்கும் படமாக இந்த ராயன் திரைப்படம் அமைந்திருக்கிறது. 50வது படம் என்பதால் ஒரு பக்கம் இயக்குனராக இன்னொரு பக்கம் நடிகராக இந்தப் படத்தில் ஜெயிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
கோலிவுட்டில் மிகவும் பிஸியான நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். டைனமிக் நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வரும் 26 ஆம் தேதி ராயன் திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ராயன் திரைப்படத்தின் புரோமோஷனிலும் பிஸியாக இருக்கிறார்.
அப்படி ஐதராபாத்தில் நடந்த புரோமோஷன் நிகழ்ச்சியில் தன் படக்குழுவுடன் கலந்து கொண்ட தனுஷிடம் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன. ரேபிட் ஃபைர் ரவுண்ட் அடிப்படையில் ராயன் படத்தில் நடித்த மற்ற நடிகர்களில் ஒருவர் ‘எந்த தெலுங்கு ஹீரோவுடன் இணைந்து டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?’ என்ற கேள்வியை கேட்டனர்.
அதற்கு பதிலளித்த தனுஷ் ‘ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றும் எனக்கு மிகவும் ஃபேவரைட்டான தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்’என்றும் பதில் கூறினார்.
இதற்கிடையில் ஆர்.ஆர்.ஆர் பட ப்ரமோஷனின் போது சென்னை வந்திருந்த ஜூனியர் என்.டி.ஆரிடம் ‘எந்த இயக்குனருடன் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என நினைக்கிறீர்கள்?’ என்று கேட்ட போது அதற்கு என்.டி.ஆர் வெற்றிமாறன் என பதில் அளித்திருந்தார்.
ஏற்கனவே வெற்றிமாறனுடன் மீண்டும் தனுஷ் ஒரு படத்தில் நடிப்பது உறுதி என ஒரு தகவல் வந்து கொண்டிருக்கிறது. இதில் இந்த பேட்டிகளை பார்க்கும் போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவரும் ஒரே ஃபிரேமில் இணைந்து மாஸ் காட்டுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.