Categories: latest news

இனிமே எல்லாம் இப்படித்தான்!. கமல் எடுத்த முக்கிய முடிவு!.. ரொம்ப ரிஸ்க் ஆச்சே!…

Kamalhaasan: கமல் நடிகர் மட்டுமல்ல. தயாரிப்பாளர், இயக்குனர் என அவருக்கு பல முகங்கள் உண்டு. அவரின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பல படங்களை தயாரித்திருக்கிறது. முதன் முதலில் கமலின் 100வது படமான ராஜபார்வை படத்தை இந்நிறுவனம் தயாரித்தது. அதன்பின் இப்போது வரை எவ்வளவோ படங்கள். இதில் 90 சதவீத படங்களில் கமல் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

அபூர்வ சகோதரர்கள். மைக்கேல் மதன காமராஜன், தேவர் மகன், விருமாண்டி, ஹேராம், விஸ்வரூபம், விக்ரம் என பல படங்களையும் இந்நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த நிறுவனம் தயாரித்ததிலேயே லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படம்தான் அதிக வசூலை பெற்றது. இப்படம் 400 கோடி வசூலை அள்ளியது.

அதேநேரம், லைக்கா தயாரிப்பில் கமல் நடித்து வெளியான இந்தியன் 2 படம் ஓடவில்லை. எனவே, இந்தியன் 3-யிலேயே கமல் ஆர்வம் காட்டவில்லை. அதன்பின் ராஜ்கமல் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கிய தக் லைப் பாடத்தில் கமல் நடித்தார். இந்த படத்திற்கு பெரிய அளவில் புரமோஷன் செய்யப்பட்டது. கமலும் பல ஊர்களுக்கும் சென்று புரமோஷன் செய்தார்.

இப்படம் பற்றி மணிரத்னமும், கமலும் பல ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்தனர். எனவே, படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், படம் வெளியானபோது நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. சமூகவலைத்தளங்களில் பலரும் படத்தை ட்ரோல் செய்தார்கள். எனவே, இது படத்தின் வெற்றியை கடுமையாக பாதித்தது. கமல் அடுத்து அன்பு – அறிவு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இதையும் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கிறது.

இந்நிலையில், இனிமேல் ராஜ்கமல் தயாரிக்கும் படத்தில் மட்டுமே நடிப்பது என முடிவெடுத்திருக்கிறாராம். அதாவது மற்ற தயாரிப்பாளர்களின் தயாரிப்பில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. லைக்கா நிறுவனத்தில் நடித்த இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 போன்ற படங்களில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களே இதற்கு காரணம் என்கிறார்கள்.

மற்ற தயாரிப்பாளர் என்றால் சம்பளத்தை வாங்கிக்கொண்டு நடிப்பதோடு வேலை முடிந்துவிட்டது. படம் ஓடவில்லை என்றாலும் நஷ்டத்திற்கும் கமலுக்கும் சம்பந்தமில்லை. ஆனால், சொந்த தயாரிப்பு என்றால் நஷ்டம் கமலுக்கு மட்டுமே. அதேநேரம், லாபம் என்றால் எல்லாம் கமலுக்கே. கமல் முடிவு சரியா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

3 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

4 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

11 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

12 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

13 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago