அய்யோ போச்சே..! எனக்கு மான பிரச்சனை.. போலீசுடன் சென்று சோதனை செய்த கஞ்சா கருப்பு..!

Actor Kanja Karuppu: தமிழ் சினிமாவில் பாலா இயக்கத்தில் வெளிவந்த பிதாமகன் என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் கஞ்சா விற்பனை செய்யும் நடிகராக நடித்து அறிமுகமானவர் கருப்பு ராஜா. மதுரையை சேர்ந்த இவர் இந்த திரைப்படத்தின் மூலமாக கஞ்சா கருப்பு என்று அழைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி இருக்கின்றார்.
சமீப நாட்களாக பெரிய அளவு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத காரணத்தால் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார் கஞ்சா கருப்பு. தற்போது சென்னையில் வசித்து வரும் இவர் நேற்று தனது வீட்டு உரிமையாளர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அதில் வீட்டிற்கு குடி வந்து நான்கு வருடம் ஆன நிலையில் மாத வாடகை 20 ஆயிரம் ரூபாய் கரெக்டாக கொடுத்து வருகின்றேன்.
அவர் கேட்கும் முன்பே நான் வாடகை பணத்தை கொடுத்து விடுவேன். ஆனால் திடீரென்று அவர் வீட்டை காலி செய்து கொடுக்கும்படி கேட்டார். நானும் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று என்னை வற்புறுத்தினார். பின்னர் அவரிடம் கொஞ்சம் டைம் கேட்டு இருந்தேன். அதன் பிறகு நானும் பல இடங்களில் வீடு தேடி அலைந்தேன்.
இடையில் சொந்த ஊரான மதுரைக்கு சென்றிருந்த நிலையில் என் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்று அனைத்து பொருட்களையும் ஓரமாக எடுத்து வைத்துவிட்டு வீட்டிற்கு வெள்ளை அடித்திருக்கிறார்கள். இப்படி எந்த வீட்டிலாவது நடக்குமா? அது மட்டும் இல்லாமல் என் வீட்டிற்குள் இருந்த கலைமாமணி விருது மற்றும் டாலர் என அனைத்தையும் காணவில்லை' என்று அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து வீட்டு உரிமையாளர் கஞ்சா கருப்பு மீது அவர் சரியாக வாடகை கொடுப்பதில்லை. வீட்டை லாட்ஜ் போல் வைத்திருக்கின்றார். 3 லட்சம் வாடகை பாக்கி கொடுக்க வேண்டும். வீட்டை காலி செய்து கொடுங்கள் என்று கேட்டால் கஞ்சா கருப்பு என்னை கொன்று விடுவேன் என்று மிரட்டுகின்றார். மேலும் இன்று காலை 10 அடியாட்களுடன் வந்து என்னை மிரட்டுகிறார் என்று இன்று காலை புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது கஞ்சா கருப்பு போலீசர்களுடன் சென்று வீட்டை சோதனை செய்த வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் எடுத்து ஒரே ரூமில் போட்டு வைத்திருக்கிறார்கள். இதை பார்த்து கதறிய கஞ்சா கருப்பு 'போச்சு போச்சு என்னோட பொருள் எல்லாத்தையும் ஒடச்சிட்டாங்க. கலைமாமணி அவார்டை திருடிட்டாங்க. இது என்னுடைய மான பிரச்சனை.
பல நாட்களாக வீட்டுக்கு வாடகை கொடுக்கவில்லை என்று கூறுவது அனைத்துமே பொய். என் ரேஷன் கார்டு ஆதார் கார்டு என எதையும் காணவில்லை. ஒரு வீட்டை வாடகைக்கு விட்டால் வீட்டு ஓனர் இப்படியெல்லாமா செய்வார்கள். வீட்டை வந்து காலி செய்து கொடுக்கின்றேன் என்று கூறுவதற்குள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் நாசம் செய்து வைத்திருக்கிறார்கள்' என்று கஞ்சா கருப்பு கதறி பேசும் வீடியோவானது தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது .