ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்தில் சிக்கிய கார்த்தி!. சென்னை திரும்பிய படக்குழு!.. பரபர அப்டேட்!...

Actor karthi: பருத்திவீரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் கார்த்தி. முதல் படத்திலேயே சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அடுத்து பையா உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். எல்லா ரசிகர்களும் பார்த்து ரசிக்கும் படி கார்த்திக் படங்கள் இருப்பதே அவரின் பலம்.
மாஸ் ஹீரோ, பன்ச் வசனம் என பெரிய நடிகர்களின் ரூட்டுக்கு போகாமல் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சூர்யாவின் தம்பி என்றாலும் கார்த்திக்கென தனி அடையாளம் உண்டு. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடித்த கைதி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
இந்த படத்தில் ஒரு பக்கா ஆக்சன் ஹீரோவாக நடித்து அசத்தியிருந்தார். ஒருபக்கம், மெய்யழகன் படத்தில் மனதை தொடும் வேடத்தில் நடித்திருந்தார். 96 அருண் இயக்கிய இந்த படம் பலருக்கும் மலரும் நினைவுகளை நினைவுப்படுத்தியது. பொன்னியின் செல்வன் படத்தில் இவருக்கு முக்கிய வேடம் கிடைத்தது. செல்வராகவன் இயக்கத்தில் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இரும்புத்திரை படத்தின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து 2022ம் வருடம் வெளிவந்த திரைப்படம்தான் சர்தார். இந்திய அரசுகுக்கு உளவு சொல்லும் நபராக கார்த்தி நடித்து வெளியான இந்த படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றது. அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்திருந்தார்.
தற்போது சர்தா 2 உருவாகி வருகிறது. இந்நிலையில்தான், மைசூரில் சண்டைக்காட்சிகளை எடுத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது கார்த்திக்கு காலில் காயம் எற்பட்டது. எனவே, ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு சென்னை திரும்பியிருக்கிறது படக்குழு. காலில் வீக்கம் ஏற்பட்டிருப்பதால் ஒரு வாரம் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில்தா ஷூட்டிங்கில் இப்படி ஒரு விபத்து ஏற்பட்டு விட்டது. அதேநேரம், ஒரு வாரம் கழித்து மீண்டும் அதே இடத்தில் ஷூட்டிங் துவங்கும் என்றே நம்பப்படுகிறது.