தலயோடு மோதும் எங்க தலைக்கு தில்ல பார்த்தியா?!.. பொங்கல் ரேஸில் இணையும் கார்த்தி!..
Actor karthi: பருத்தி வீரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் கார்த்தி. பொதுவாக எல்லா நடிகர்களுக்கும் தனிப்பட்ட ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், சில நடிகர்களை மட்டுமே எல்லோரும் ரசிப்பார்கள். கார்த்தி அப்படிப்பட்ட ஹீரோக்களில் ஒருவர்தான். குழந்தைகளுக்கும் இவரை பிடிக்கும்.
மிகவும் ஜாலியாகவும் நடிப்பார். அதிரடி சண்டைக் காட்சிகளிலும் நடிப்பார். சிறுத்தை படத்தில் அசத்தலான போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதே படத்தில் திருடனாகவும் கலக்கி ரசிகர்களை சிரிக்க வைத்தார். பையா போன்ற ரொமான்ஸ் படங்களிலும் நடித்திருக்கிறார்.
சர்தார் படத்தில் இந்திய அரசாங்கத்தின் உளவாளியாக சிறப்பாக நடித்திருந்தார். இந்த படத்தின் 2ம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. கார்த்தியின் 25வது திரைப்படமாக ஜப்பான் வெளியாகி தோல்வியை தழுவியது. அதன்பின், சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
பொதுவாக பெரிய ஹீரோக்கள் ஒரு படத்தை முடித்துவிட்டே அடுத்த படத்திற்கு போவார்கள். ஆனால், கார்த்தி ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று படங்களில் நடிக்கும் நடிகராக மாறிவிட்டார். சர்தார் 2 படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே மெய்யழகன் படத்தில் நடிக்கப்போனார்.
96 பிரேம் இயக்கத்தில் வெளியான மெய்யழகன் படம் ஒரு ஃபீல் குட் மூவியாக வெளிவந்தது. இந்த இரண்டு படங்களுக்கும் முன்பே ‘வா வாத்தியாரே’ என்கிற படத்தில் நடித்தார் கார்த்தி. இப்படத்தை சூது கவ்வும் பட இயக்குனர் நளன் குமாரசாமி இயக்கி வருகிறார். இதில், ராஜ்கிரணும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், இந்த படத்தின் வேலைகள் முடிந்துவிட்டது. படத்தை பார்த்த கார்த்திக்கு படம் மிகவும் பிடித்துவிட்டதாம். எனவே, வருகிற பொங்கலுக்கு இப்படத்தை வெளியிடலாம என முடிவு செய்திருக்கிறார்களாம். ஏற்கனவே அஜித்தின் விடாமுயற்சி அல்லது குட் பேட் அக்லி என இந்த இரண்டில் ஒரு படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. அதோடு, விக்ரமின் வீர தீர சூரன் படமும் பொங்கலை குறி வைத்திருக்கிறது. ஆனாலும், வா வாத்தியாரே படத்தை இறக்க கார்த்தி திட்டமிட்டிருக்கிறாராம்.