எஸ்டிஆர் பட இயக்குனருடன் கைகோர்க்கும் கவின்!... போற போக்க பாத்தா SK-வயே மிஞ்சிருவாரு போலையே!..
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கவின். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கனா காணும் காலங்கள் என்கின்ற தொடர் மூலம் சினிமாவில் அறிமுகமான கவின், அதைத்தொடர்ந்து சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். தொடர்ந்து சின்னத்திரையில் வலம் வந்த கவின் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மிகப்பெரிய புகழை பெற்றுவிட்டார்.
இந்த நிகழ்ச்சி இவருக்கு ஒரு நல்ல வரவேற்பை கொடுத்தது. இதன் மூலமாக நடிகர் கவினுக்கு அடுத்தடுத்து திரைப்படங்களின் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட கவின் சிறப்பான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு லிஃப்ட் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து டாடா என்கின்ற படத்தில் நடித்திருந்தார்.
டாடா திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பை கொடுத்தது. பின்னர் இவர் ஸ்டார் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் இளைஞர்கள் மத்தியில் நடிகர் கவின் பிரபலமாகிவிட்டார். இதைத்தொடர்ந்து தற்போது அறிமுக இயக்குனரான சிவபாலன் இயக்கத்தில் ப்ளடி பகர் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.
இயக்குனர் சிவபாலன் இயக்குனர் நெல்சனின் உதவியாளர் ஆவார். மேலும் இந்த திரைப்படத்தில் கவின் உடன் ரெடிங் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், பிரியதர்ஷினி ராஜ்குமார், அக்ஷயா ஹரிஹரன் உள்ள பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் வருகிறது தீபாவளி அன்று திரையரங்களில் வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை பிளமென்ட் பிக்சர்ஸ் சார்பாக நெல்சன் திலிப் குமார் தயாரிக்கின்றார்.
தொடர்ந்து பல திரைப்படங்களை கையில் வைத்திருக்கின்றார் நடிகர் கவின். பிளடி பக்கர் திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க், சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கிஸ், அருண் இயக்கத்தில் ஊர் குருவி, அடுத்ததாக லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனரான விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாராவுடன் ஹாய் என்கின்ற திரைப்படத்திலும் நடிக்க இருக்கின்றார்.
இப்படி ஏகப்பட்ட திரைப்படங்களை தனது கையில் வைத்திருக்கும் நடிகர் கவின் அடுத்ததாக சிம்பு நடிப்பில் உருவான 10 தல திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கிருஷ்ணாவுடன் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல் வெளியாகி இருக்கின்றது. இப்படி கையில் அரை டஜன் படங்களை வைத்திருப்பதை பார்த்த ரசிகர்கள் பலரும் போற போக்க பார்த்தா சிவகார்த்திகேயனையே கவின் மிஞ்சி விடுவார் என்று கூறி வருகிறார்கள்.