சிவகார்த்திகேயன் மீது ஏன் இவ்வளவு வன்மம்?.. அவன வாழ விடுங்க!.. பொங்கிய நெப்போலியன்!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:46  )

Sivakarthikeyan: பொதுவாக மதுரை, தேனி, கோவை, திருநெல்வேலி போன்ற ஊர்களில் இருந்துதான் பெரும்பாலானோர் சினிமாவுக்கு வருவர்கள். சினிமாவில் பெரிய அளவில் சாதித்து ரசிகர்களிடம் பிரபலமானவர்கள் அதிகபட்சம் இந்த ஊரை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். சிலர் மட்டுமே சேலம், திருச்சி போன்ற ஊர்களில் இருந்து வருவார்கள்.

அப்படி திருச்சியிலிருந்து வந்தவர்தான் சிவகார்த்திகேயன். இவரின் அப்பா ஒரு காவல்துறை அதிகாரி. சிவகார்த்திகேயன் கல்லூரியில் படித்து வந்தபோதே தந்தையை இழந்துவிட்டார். கல்லூரி படிப்பிற்கு பின் இசை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்து வந்தார். அதன்பின், விஜய் டிவியில் ஆங்கராக பணிபுரிந்தார்.

விஜய் டிவியில் சில காமெடி நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக பணிபுரிந்தார். அதன்பின் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு முயற்சிகள் செய்தார். பல கம்பெனிகளில் ஏறி இறங்கி பல இயக்குனர்களிடமும் வாய்ப்பு கேட்டார். இதற்கிடையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் அவரின் நண்பராக நடிக்கும் வாய்ப்பு வந்தது.

ஒருவழியாக பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின், மனம் கொத்திப்பறவை படத்தில் நடித்தார். தனுஷின் தயாரிப்பில் அவர் எதிர் நீச்சல் படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் வெற்றி எஸ்.கே.வை ஒரு முன்னணி நடிகராக மாற்றியது.

அதன்பின் ரஜினி முருகன், ரெமோ என டேக் ஆப் ஆனார். தமிழ் சினிமாவில் மிகவும் குறுகிய காலகட்டத்தில் உச்சத்துக்கு போன நடிகர் இவர்தான். ரஜினி, விஜய், அஜித்துக்கு பின் அதிக சம்பளம் வாங்கி மற்ற நடிகர்களை பொறாமைப்பட வைத்தார். ஒருபக்கம், இவரை சுற்றி சில சர்ச்சைகளும் இருக்கிறது. இசையமைப்பாளர் டி இமான் சிவகார்த்திகேயன் மீது சொன்ன குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பல படங்களில் நடித்தவரும், தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டவருமான நெப்போலியன் வீடியோ ஒன்றில் பேசியபோது ‘வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என சொல்லிவிட்டு தமிழகத்தின் மத்திய பகுதி திருச்சியிலிருந்து ஒரு பையன் நடிக்க வந்து. இவ்வளவு சீக்கிரம் மேல வரான்னா அவன நாம பாராட்டணும்.. ஆதரவா இருக்கணும்.. சினிமாவுல ஆரோக்கியமான போட்டி இருக்கறது நல்லது. இன்னைக்கு சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் டாப் 5 நடிகர்கள் படத்துக்கு சமமா வசூல் ஆகுது. நீங்க அதை விட சிறந்த படம் கொடுக்க முயற்சி பண்ணுங்க.. அதை விட்டுவிட்டு அவன் மேல பொறாமை பட்டு இழிவா பேசுறது நல்லா இல்லை’ என பொங்கியிருக்கிறார்.

நெப்போலியனும் திருச்சியிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story