இது கர்வத்தின் உச்சக்கட்டம்! ரஜினியை இந்தளவுக்கு பேசியிருக்கிறாரே பார்த்திபன்..என்னவா இருக்கும்?

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவின் பெருமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சமுதாயத்தில் ஒரு நபர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களை எந்தளவு புகழ்ந்து பேசுவோமோ அதற்கு இணையாக அவர்களை பற்றி விமர்சித்தும் பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். அந்த வகையில் ஒட்டுமொத்த கோலிவுட்டிற்கே ஒரு பெருமை சேர்த்த நடிகராக இருக்கும் ரஜினியை பற்றி பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

ஏன் சமீபத்தில் கூட அம்பானி வீட்டு திருமணத்தில் தலைவரின் நடனம் பெரும் பேசு பொருளாக மாறியது. இதை பற்றி பிரபல இயக்குனர் பேரரசு ஒரு விழா மேடையில் ‘ஏன் ரஜினியும் ஒரு மனுஷன்தானே? சூப்பர் ஸ்டார்னா எல்லாருக்கும் அடிமையா? அவருக்கும் ஆசை, பாசம் என தனிப்பட்ட விதத்தில் இருக்கும். அதை ஏன் தடுக்கிறீர்கள்? இதை ஒரு பெரிய தேசக் குற்றமாக பேசிக் கொண்டு வருகிறீர்களே’ என கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் அம்பானி வீட்டு திருமணத்தில் ரஜினி ஒரு பெரிய தொகையை பெற்றுக் கொண்டுதான் அங்கு நடனம் ஆடியிருக்கிறார் என்றும் பல பேர் கருத்து தெரிவித்து வந்தனர். அதற்கு நெத்தியடி பதிலாக பார்த்திபன் அவருடைய கருத்தை கூறியிருக்கிறார்.

இரும்பை காந்தம் இழுக்கும். ஆனால் அந்த காந்தத்தையே இழுப்பவர் ரஜினிகாந்த் என கூறி அம்பானி வீட்டில் தலைவர் என்னமா டான்ஸ் ஆடினார்? பார்க்கவே அவ்ளோ ஆசையாக சந்தோஷமாக இருந்தது. அதுவும் பாரம்பரிய உடையில் அவர் போனதை எல்லாரும் ரஜினி சிம்பிளாக இருக்கிறார் என்றுதானே நினைக்கிறீர்கள்.

ஆனால் அதுதான் இல்லை. அது கர்வத்தின் உச்சம் என பார்த்திபன் கூறினார். ஏனெனில் தன்னை அடையாளப்படுத்துவதை பற்றி வெளிப்படுத்தும் போது அதில் பெருமையைத் தவிர கர்வமே இருக்கும். உதாரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் எங்கு போனாலும் தமிழில்தான் பேச்சை தொடங்குவார். அது ஏனெனில் தான் ஒரு தமிழன் என்பதை கர்வமாக சொல்வதில் அவருக்கு பெருமை.

இது கர்வத்தின் உச்சக்கட்டம்! ரஜினியை இந்தளவுக்கு பேசியிருக்கிறாரே பார்த்திபன்..என்னவா இருக்கும்?அதே போல்தான் ரஜினியும் அம்பானி வீட்டு திருமணத்திற்கு போகும் போது வட நாட்டு ஆடையை உடுத்தாமல் நம் கலாச்சாரத்தைப் போற்றும் வேட்டி சட்டையில் போனதும் ஒரு கர்வம்தான் என பார்த்திபன் கூறியிருக்கிறார். ரஜினியின் ஒரு ரசிகன் கூட இந்தளவு ரஜினியை ரசித்திருக்க முடியாது. அதை விட பார்த்திபன் அதிகமாகவே ரஜினியை ரசித்து ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

Next Story