6 படங்களில் நடிக்க பிரபாஸுக்கு இவ்வளவு கோடி சம்பளமா!.. கேட்டா தலையே சுத்துது!...

by ராம் சுதன் |

Actor prabhas: 2002ம் வருடம் தெலுங்கில் ஒரு சாதாரண இளம் நடிகராக அறிமுகமானவர்தான் பிரபாஸ். இவர் ஹைதராபத்தில் பிடெக் படித்தவர். படிப்படியாக வளர்ந்து இப்போது தெலுங்கில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறியிருக்கிறார். அதோடு, பேன் இண்டியா ஸ்டாராகவும் மாறிவிட்டார்.

அதற்கு காரணம் ராஜமவுலி இயக்கத்தில் உருவான பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களின் மெகா வெற்றிதான். இந்த படங்கள் தெலுங்கில் உருவானாலும் தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட சில மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி எல்லா மொழியிலும் வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

இந்த படத்திற்கு பின்னரே தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் எல்லா மொழியிலும் டப் செய்யப்பட்டு பேன் இண்டியா படங்களாக வெளியனது. அதில், கேஜிஎப், காந்தரா, புஷ்பா, கேஜிஎப்2 போன்ற படங்கள் நல்ல வசூலை பெற்றது.

பாகுபலிக்கு பின் பிரபாஸின் மார்க்கெட் வேல்யூ கூடியது. தொடர்ந்து பல படங்களிலும் புக் செய்யப்பட்டார். பாகுபலி இரண்டு பாகங்களிலும் நடிக்க 25 கோடி மட்டுமே சம்பளமாக பெற்ற பிரபாஸ் அதன்பின் பல மடங்கு சம்பளத்தை உயர்த்தினார். சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார், கல்கி ஆகிய படங்கள் பேன் இண்டியா படங்களாக வெளியானது.

இதில் கல்கி 2898 ஏடி படத்தில் கமலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஹிந்தியில் வசூலை அள்ள அமிதாப்பச்சனும் நடித்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் அடுத்து வருடம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 6 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் பிரபாஸ்.

அந்த 6 படங்களுக்கும் சேர்த்து 900 கோடியை சம்பளமாக வாங்கவிருக்கிறார் பிரபாஸ். அதாவது ஒரு படத்திற்கு 150 கோடியை சம்பளமாக பேசியிருப்பார் என கணிக்கப்படுகிறது. அந்த 6 படங்களுமே தமிழ் உள்ளிட்ட எல்லா மொழிகளிலும் டப் செய்யப்பட்டு பேன் இண்டியா படமாகவே வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story