விஜயகாந்த் காதலிச்சது உண்மையா? ராதாரவி என்ன சொல்லியிருக்காரு பாருங்க

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் விஜயகாந்த் இருந்த நேரத்தில் அத்தனை நடிகர்களும் ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி வந்தார்கள். அதோடு விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த நேரத்தில் எந்த பிரச்சினையும் வராமல்தான் இருந்தது. அப்படி வந்தாலும் என்ன செய்தால் பிரச்சினையை தீர்க்கலாம் என்பதை நன்கு அறிந்தவராக இருந்தார் விஜயகாந்த்.

அதனாலேயே விஜயகாந்த் மீது தமிழ் சினிமாவில் ஒரு மதிப்பும் மரியாதையும் இருந்தது. அதுமட்டுமில்லாமல் விஜயகாந்த் என்று சொன்னாலே அனைவரும் சொல்வது ‘அவர் எல்லாருக்கும் பாரபட்சம் இல்லாமல் உதவிகளை செய்வார். வாரி வாரி கொடுப்பார்’ என்பதுதான்.

ஆனால் அதுதான் உண்மை. அதோடு அவர் அலுவலகத்தில் எப்போதும் பெரிய பெரிய அளவில் சமையல் நடந்து கொண்டே இருக்குமாம். ஏனெனில் அவரை தேடி யார் வந்தாலும் அவர்களை சாப்பிட வைத்துதான் அனுப்புவாராம் விஜயகாந்த். அதை இப்போது வரை அவருடைய மனைவி மகன்கள் பின்பற்றி வருகிறார்கள்.

அவர் போனபிறகும் கூட அவர் அலுவலகத்தில் தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் விஜயகாந்தின் காதலை பற்றி ராதாரவியிடம் கேட்ட போது பதில் சொல்ல முடியாமல் திகைத்தார்.

அதாவது ராதாரவி கூறும் போது ராதிகாவை எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என்ற கேரக்டரிலேயே நடித்திருக்கிறேன் என்று கூறினார். அதற்கு கேள்வி கேட்ட நிருபர் ‘அப்படி நீங்க நடிக்கலாமா?’ என கேட்டார்.ஏனெனில் சொந்த தங்கையான ராதிகாவை சினிமாவிற்காக எப்படினாலும் நடிக்கலாமா என்ற விதத்தில் அந்த நிருபர் கேட்டார்.

அதற்கு பதிலளித்த ராதாரவி ‘இயக்குனர் சொன்னாருங்க. அதான் நடித்தேன்’ என கூறினார். அதன் பிறகு அந்த நிருபர் ‘சரி விஜயகாந்தை யாரோ ஒரு நடிகை காதலித்ததாக சொல்கிறார்களே? அது உண்மையா?’என கேட்டார். அதற்கு ராதாரவி ‘அதெல்லாம் எனக்கு தெரியாது’என கூறினார்.

இருந்தாலும் விடாத அந்த நிருபர் ‘என்ன சார் நீங்க? நீங்களும் விஜயகாந்தும் நெருக்கமான நண்பர் என சொல்றீங்க? அவங்க காதலை பற்றி தெரியாதா?’ என கேட்டார். அதற்கு ராதாரவி ‘அரசல் புரசலாக சொன்னாங்க. ஆனால் உண்மை என்ன என்பது எனக்கு தெரியாது’ என கூறி நழுவி விட்டார்.

Next Story