பெருங்கூட்டத்துடன் வந்த விஜயகாந்த்.. பார்த்ததும் அலறிய ரஜினி! இது எப்போ நடந்தது?

Published on: November 7, 2024
---Advertisement---

Vijayakanth: தமிழ் சினிமாவில் ரஜினி கமல் என இரு பெரும் ஆளுமைகளாக 70களில் இருந்து இன்று வரை அவர்களது ராஜ்யத்தை நடத்தி வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் மிக உச்சத்தில் இருக்கும்போது திடீரென ஒரு நடிகர் முளைத்து வந்தார்.

ஆரம்பத்தில் வில்லன் நடிகராக துணை நடிகராக நடித்து அதன் பிறகு இருவருக்குமே டஃப் கொடுக்கும் நடிகராக மாறினார். அவர்தான் கேப்டன் விஜயகாந்த். பார்ப்பதற்கு ரஜினியைப் போன்ற நிறத்துடன் அவரைப் போன்ற தோற்றத்துடன் இருப்பதாலும் இவரையும் மக்கள் கொண்டாட ஆரம்பித்தார்கள்.

ஆக்சனுக்கு பேர் போனவர். பெரும்பாலான படங்களில் போலீஸ் அதிகாரியாகவும் தமிழ் பற்று மிக்கவராகவும் நடித்ததனால் தமிழ் மக்கள் மனதில் ஆழமாக பதிந்தார் விஜயகாந்த். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதில் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக கருப்பு எம்ஜிஆர் என்ற பெயரோடு அழைக்கப்பட்டார்.

விஜயகாந்த் எம்ஜிஆரின் தீவிர ரசிகராகவும் இருந்தவர். சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தாலும் நடிகர் சங்க தலைவராகவும் மாறினார். நடிகர் சங்க தலைவராக இருந்து சங்க கடனை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தி அடைத்தார். பெருங்கடனில் இருந்து நடிகர் சங்கத்தை மீட்டவர்.

இந்த நிலையில் பிரபல குணச்சித்திர நடிகர் ஆன டெல்லி கணேஷ் விஜயகாந்தை பற்றிய ஒரு செய்தியை கூறியிருக்கிறார். பாபா பட ஷூட்டிங்கில் ரஜினியுடன் அனைவரும் சிவாஜி கார்டனில் பேசிக் கொண்டிருந்தார்களாம். திடீரென ஒரு கார் வந்து நின்றதாம்.

அதில் ஒருவர் இறங்கி வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தாராம். அவரைப் பார்த்ததும் ரஜினி யாரது யாரது என பதறியபடி எழுந்து கேட்டாராம். அவர் பின்னாடி 10 அம்பாசிடர் காரும் வந்து நிற்க ஒரே வெடவெடத்து போனாராம் ரஜினி. அதன் பிறகு தான் தெரிந்தது அது விஜயகாந்த் என.

ரஜினி அருகில் வந்ததும் நடிகர் சங்க கலை நிகழ்ச்சிகளை நடத்த சிங்கப்பூர் மலேசியா செல்ல இருக்கிறோம். கமல் வருகிறேன் என சொல்லிவிட்டார். நீங்களும் வாருங்கள் என கூறினாராம். விஜயகாந்த் அவரை ஒரே ஒருமுறைதான் வாங்க என கூறியிருக்கிறார். ஆனால் ரஜினி 10 தடவைக்கு மேல் வந்து விடுவேன் வந்துவிடுகிறேன் என அவருடைய ஸ்டைலில் கூறினாராம். இது உண்மையில் நடந்த சம்பவம் என்று டெல்லி கணேஷ் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.