ராமராஜனுக்கு இருக்கும் ஒரே கவலை இதுதானாம்! சின்னக் குழந்தை மாதிரி அழுகுறாரே
தமிழ் சினிமாவில் கிராமத்து மண்வாசனையுடன் கூடி மண் மணம் கமழும் வகையில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் ராமராஜன். கரகாட்டக்காரன் படம்தான் அவரை வேறொரு புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற படமாக அமைந்தது. கரகாட்டக்காரன் படம் ரிலீஸ் சமயத்தில் ரஜினி மற்றும் கமல் இவர்களின் படங்களும் ரிலீஸாக ராமராஜனின் கரகாட்டக்காரன் தான் ஹவுஸ்ஃபுல்லாக ஓடியது.
அதை ரஜினியும் ஆச்சரியமாக பார்த்த சம்பவம் எல்லாம் நடந்திருக்கிறது. எம்ஜிஆர் மாதிரியே ராமராஜனும் தன் படங்களில் மது, புகை உள்ளிட்ட காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வந்தார். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான ராமராஜனின் திருமணத்தை நடத்தி வைத்ததே எம்ஜிஆர் தான் என்பது அனைவருக்கும் தெரியும்.
நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட ராமராஜன் இருவரும் மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கையை நடத்தினார்கள். இருவருக்கும் ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார். பின் கருத்து வேறுபாடு காரணமாக நளினியும் ராமராஜனும் பிரிந்து வாழ்ந்துவருகிறார்கள்.
ஆனால் இருவரும் பிரிந்தாலும் உள்ளத்தில் ஒருவருக்கொருவர் அதே பாசத்துடனும் அன்புடனும்தான் இருக்கிறார்கள். பிரிவுக்கு பிறகு இருவருமே இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் தன் பிள்ளைகள் குறித்து ஒரு பேட்டியில் ராமராஜன் பேசியது அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அவருடைய மகன் ஆடிட்டிங் முடித்து ஸ்காட்லாந்தில் ஒரு நல்ல உத்யோகத்தில் இருக்கிறாராம். அதை போல அவருடைய மகளும் எம்.காம்., பி.எல் முடித்து வக்கீலாக பணியாற்றி வருகிறாராம். மகனுக்கு இரு குழந்தைகள் இருக்கிறார்களாம். ஆனால் மகளுக்குத்தான் இன்னும் குழந்தை இல்லை. அதுதான் என்னுடைய ஒரே கவலை. அவளுக்கும் ஒரு குழந்தை இருந்தால் சந்தோஷமாக இருக்கும் என கண்கலங்கி பேசினார் ராமராஜன்