குட்டிக்கரணம் அடிச்சாலும் எம்ஜிஆர் போல முடியாது! விஜய் பற்றி இப்படி சொல்லிட்டாரே ரமேஷ் கண்ணா
தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் கொடை வள்ளல்களாகவே இருந்திருக்கிறார்கள். அதுவும் அந்த காலத்தில் என் எஸ் கிருஷ்ணன் ஒரு கர்ணனாகவே வாழ்ந்திருக்கிறார். அதற்கு ஒரு சின்ன உதாரணமாக அவர் கஷ்டப்பட்ட காலத்திலும் ஒரு வெள்ளி வெத்தல பெட்டி வைத்திருந்தாராம்.
அப்போது யாரோ ஒருவர் தர்மம் கேட்டு வர அருகில் இருந்த மனைவியை உள்ளே தண்ணீர் கொண்டு வர சொல்லி அனுப்பி வைத்து அந்த வெள்ளி வெத்தலை பெட்டியை தர்மம் கேட்ட வந்தவருக்கு தெரியாமல் கொடுத்து அனுப்பி வைத்த பெரும் வள்ளலாக வாழ்ந்திருக்கிறார் என் எஸ் கிருஷ்ணன்.
அவரை பின்பற்றி வந்தவர் தான் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர். இவரும் இல்லாதவர்களுக்கு எத்தனையோ பல உதவிகளை செய்து இருக்கிறார். அவர் இறக்கும் வரையில் ஏழைகளுக்காகவே அவர்களின் நலன் கருதியே ஏராளமான உதவிகளை செய்து இருக்கிறார்.
இந்த அளவுக்கு எம்ஜிஆர் ஒரு கொடை வள்ளலாக இருந்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம் என் எஸ் கிருஷ்ணன். இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான ரமேஷ் கண்ணா ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார். என் எஸ் கிருஷ்ணனின் சொத்து வருமானத்தை பார்க்கும்போது எல்லாவற்றிலும் தர்மம் தர்மம் என்ற எழுதியிருந்ததாம்.
இதை பார்த்த வருமான வரித்துறை அதிகாரிகள் அது என்ன எல்லாவற்றுக்கும் தர்மம் தர்மம் என எழுதி இருக்கிறது? அப்படி என்னதான் அவர் வீட்டில் நடக்கிறது என்பதை அறிய மாறுவேடத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் உதவி கேட்பது போல சென்றிருக்கிறார்கள்.
அப்போது அந்த அதிகாரி தன் மகளுக்கு திருமணம் வைத்திருப்பதாகவும் அதற்கு பணம் தேவை என்றும் சொல்ல உடனே தன் பாக்கெட்டில் இருந்த ஆயிரம் ரூபாயை எடுத்து யாருனே தெரியாத ஒருவருக்கு தானமாக கொடுத்திருக்கிறார். இதை பார்த்ததும் அந்த வருமான வரித்துறை அதிகாரிக்கு ஒரே அதிர்ச்சியாம் .
அதன் பிறகு அவர் செய்த தவறை எண்ணி அவரிடம் மன்னிப்பு கேட்டு சென்றாராம். அதே போல் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது சட்டமன்றம் முடிந்து வெளியே வந்தாராம். அந்த நேரத்தில் அங்கு இருந்த ஒரு முக்கியமான பிரபலம் வீட்டிற்கு போகாமல் இருந்திருக்கிறார். அவரிடம் எம்ஜிஆர் ஏன் வீட்டுக்கு போக வில்லை என்று கேட்டாராம்.
அதற்கு அவர் ‘இல்ல இங்கு கொஞ்சம் கூலாக இருக்கிறது. வீட்டிற்கு போனால் வெட்கை தாங்க முடியாது. அதனால் மாலை நேரத்தில் போகலாம் என நினைக்கிறேன்’ என கூறினாராம். உடனே எம்ஜிஆரும் இவரும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு அதன் பின் கிளம்பியிருக்கிறார்கள். அந்த முக்கிய பிரபலம் வீட்டிற்கு போனதும் வீடு முழுவதும் ஏசி போட்டிருப்பதை பார்த்து ஷாக் ஆகியிருக்கிறார்.
பேசிக் கொண்டிருந்த நேரத்தில் எம்ஜிஆர் தான் இதை ஏற்பாடு செய்ய சொன்னாராம். அந்தளவுக்கு இருந்திருக்கிறார் எம்ஜிஆர்.இதை ரமேஷ் கண்ணா கூறும்போது இப்படிப்பட்ட ஒரு நடிகர்கள் இந்த காலகட்டத்தில் யாருமே இல்லை. என் எஸ் கிருஷ்ணன் ,எம்ஜிஆர் இவர்களை தவிர வேறு யாருக்கும் அந்த எண்ணம் வரவே இல்லை .
இப்போது அஜித் விஜய் எல்லாம் செய்கிறார்கள். ஆனால் எம்ஜிஆர் போல் அவர்களால் வரவே முடியாது என்ற அவருடைய கருத்தை பதிவிட்டு இருக்கிறார்.