என் லெவலுக்கு இந்த படம் தேவையில்லை… தளபதி69ஐ தூக்கி எறிந்த சத்யராஜ்… காரணம்தான் ஹைலைட்டே!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:30:17  )

Thalapathy69: தளபதி விஜயின் கடைசி திரைப்படமான தளபதி69 திரைப்படத்தில் நடிக்க இருந்த சத்யராஜ் தற்போது படத்தில் இருந்து மொத்தமாக விலகி இருக்கிறார். இதற்கான காரணமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் தன்னுடைய கேரியரில் கடைசி திரைப்படத்தில் நடித்து வருகிறார். தளபதி 69 என தற்போது அழைக்கப்பட்டு வரும் இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். கேவிஎன் புரொடக்‌ஷன் இப்படத்தினை தயாரித்து வருகிறது.

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பூஜா ஹெக்டே, பிரியாமணி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இருக்கும் நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இப்படத்தின் கதை தெலுங்கில் வெளியான பகவந்த கேசரி படத்தினை மையமாக வைத்து உருவாகப்பட்டுள்ளது. இப்படத்தில் பாலகிருஷ்ணா நடித்திருந்தார். தற்போது அரசியலுக்கு நுழைய இருக்கும் விஜயும் இதே போன்ற அரசியல் கதையில் நடிக்க விரும்புவார் எனவும் கூறப்படுகிறது.

படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக முதலில் தகவல்கள் வெளியானது. தற்போது சத்யராஜ் படத்தில் நடிக்கவில்லை என தகவல்கள் கசிந்திருக்கிறது. நடிகர் விஜய் அரசியலுக்குள் சென்று இருப்பதால் அவருடன் நடிக்க சத்யராஜ் விருப்பம் இல்லையாம். அது மட்டுமல்லாமல் சத்யராஜ் சம்பளத்தை கொடுக்க தற்போது பட்ஜெட் இல்லை எனவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் நடிகை சத்யராஜ் மற்றும் விஜய் இருவரும் இணைந்து தலைவா திரைப்படத்தில் அப்பா மற்றும் மகனாக நடித்திருந்தனர். அப்படத்தினை விட நண்பன் திரைப்படத்தில் இருவரின் நடிப்பும் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Next Story