Categories: latest news

கமல், அஜித் பண்ணதை STR50-ல் பண்ணும் சிம்பு!.. அவர் ஃபேன்ஸுக்கு செம ட்ரீட் இருக்கு!..

STR50: சின்ன வயது முதலே சினிமாவில் நடித்து வருபவர் சிம்பு. ரஜினியை போல இவரும் பல ஸ்டைல்களை செய்து வந்தார். இவருக்கு லிட்டில் சூப்பர்ஸ்டார் என்கிற பட்டத்தையும் அவரின் அப்பா டி.ஆர் கொடுத்தார். ஆனால், காலப்போக்கில் அந்த பட்டம் காணாமல் போய்விட்டது. சிம்புவும் அந்த பட்டத்தை தனது பெயருக்கு முன் போட்டுக்கொள்வது இல்லை.

சிம்பு மிகவும் திறமையான நடிகர். பல கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். வானம், மாநாடு, விண்ணை தாண்டி வருவாயா போன்ற படங்களில் சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார். இவருடன் ஜோடி போட்டு நடிக்க பல இளம் நடிகைகளும் ஆசைப்படுகிறார்கள். ஆனால், தொடர்ந்து சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார்.

அவரின் பத்து தல படம் வெளியாகி 2 வருடங்கள் ஆகியும் அவரின் அடுத்த படம் இன்னமும் வெளியாகவில்லை. இப்போது மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் இணைந்து அவர் நடித்துள்ள தக் லைப் படம் வருகிற ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு முன் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் ஒரு படம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அது டேக் ஆப் ஆகவில்லை

தக் லைப் படத்திற்கு பின் பார்க்கிங் பட இயக்குரின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில்தான் சந்தானம் அவருடன் நடிக்கிறார். அதன்பின் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தை சிம்புவே தயாரித்து நடிக்கவுள்ளர். இது சிம்புவின் 50வது திரைப்படமாகும். இது ஒரு சரித்திர கதை எனவும், இந்த படத்தில் சிம்பு இரட்டை வேடத்திலும் நடிக்கிறார் என ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்நிலையில், இரட்டை வேடத்தில் ஒன்றில் சிம்பு பெண்மை கலந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம். இதை அவர் ஊடகம் ஒன்றில் சொல்லிவிட்டார். ஏற்கனவே அவ்வை சண்முகி படத்தில் கமலும், வரலாறு படத்தில் அஜித்தும் இதை செய்திருக்கிறார்கள். சிம்புவுக்கு இது முதல் முறை. எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. இதை எப்படி செய்ய வேண்டும் என கமல் சாரிடமும் பேசினோம்’ என சொல்லியிருக்கிறார் சிம்பு.

பெண்மை கலந்த வேடத்தில் நடிப்பது என்பது சிம்பு இதுவரை செய்யாத ஒன்று. எனவே, அவரின் ரசிகர்களுக்கு இப்படம் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

3 minutes ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

1 hour ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

2 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

3 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

3 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

10 hours ago