இவ்ளோ பட்ஜெட்டா? ஒதுங்கும் தயாரிப்பாளர்கள்.. கைவசம் ஜாக்பாட் இயக்குனர் இருந்தும் அல்லோலப்படும் சிம்பு
சிம்புவுக்கு சொல்லிக் கொள்ளும் படியாக தக் லைஃப் படம் மட்டுமே இருக்கின்றது. பத்து தல படத்திற்கு பிறகு சிம்புவை பற்றி அடுத்தடுத்த அப்டேட்கள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் ஐசரி கணேஷுடனான பிரச்சினையால் மீண்டும் சிம்புவின் நிலைமை மோசமானது. கமல் தயாரிப்பில் சிம்பு நடிப்பதாக இருந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
இப்போது அந்த படத்தை ராஜ்கமல் தயாரிப்பதாக இல்லை என்ற முடிவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் தேசிங்கு பெரியசாமி இயக்கும் அந்தப் படத்தை சிம்புவே தயாரிப்பார் என்று ஒரு செய்தி வெளியாகி வருகிறது. மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் தக் லைஃப். கமலுடன் இணைந்து சிம்பு ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.
அதற்கான டப்பிங் வேலையில்தான் இப்போது சிம்பு ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் மலையாள படம் 2018 படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனியை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என லைக்கா லாக் செய்து வைத்திருந்தது. ஆனால் அது அப்படியே ட்ராப் ஆனது.
இதனால் ஐசரி கணேஷ் அந்த ப்ராஜக்டை கையில் எடுத்தார். அதுமட்டுமில்லாமல் இதில் சிம்புவை நடிக்க வைக்கலாம் என்று ஐசரி நினைக்க படத்தின் பட்ஜெட்டை கேட்டு கொஞ்சம் ஐசரி தயங்கினாராம். ஏனெனில் படத்தின் மொத்த பட்ஜெட் 150 கோடி என்று சொல்லப்படுகிறது. அதனால் ஐசரி பின்வாங்கியதாக சொல்லப்படுகிறது.
இன்னொரு பக்கம் படத்தின் கதை அல்டிமேட்டாக இருப்பதனால் சிம்புவுக்கு இந்த கதையை விட மனசு வரவில்லையாம். அதனால் தன் நண்பரான மகத்தை ஏஜிஎஸுக்கு அனுப்பி அங்கு பேச்சு வார்த்தை நடத்த சொல்லியிருக்கிறார்.
ஏஜிஎஸுக்கும் படத்தின் கதை மிகவும் பிடித்துப் போக அவர்களும் பட்ஜெட்டை கேட்டுத்தான் யோசிக்கிறார்களாம். அதுவும் இவ்ளோ பட்ஜெட்டில் சிம்புவை வைத்து எடுத்தால் சரி வருமா என்றும் யோசிக்கிறார்களாம். அதனால் சிம்பு தில் ராஜுவை அணுகியிருப்பதாக சொல்லப்படுகிறது. தில் ராஜுவிடம் இருந்து இன்னும் எந்தவித பதிலும் வரவில்லையாம்.