Video: இளம்நடிகரின் திருமண வாழ்க்கைக்கு... சிம்பு சொன்ன மந்திரம்!
நாற்பது வயதைக் கடந்தும் முரட்டு பேச்சுலராக வலம்வந்து குடும்பஸ்தர்களை பெருமூச்சில் ஆழ்த்தி வருபவர் சிம்பு. தமிழ் சினிமாவை பொறுத்தவரை சிம்புவிற்கு என ஒரு மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. குறிப்பாக பெண் ரசிகைகள் இவருக்கு அதிகம்.
தற்போது சிம்பு அவரின் நாற்பத்து எட்டாவது படம் மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் விறுவிறுப்பாக படம் பிடிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் சினிமா நடிகர்கள் மட்டுமின்றி ரசிகர்களுமே சிம்பு எப்போது திருமண சாப்பாடு போடுவார் என ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் ஒரு திருமணம் விடாமல் அட்டெண்ட் செய்துவரும் சிம்பு பேச்சுலர் வாழ்க்கையே நன்றாக இருப்பதாக என்ஜாய் செய்து வருகிறார்.
லைம்லைட்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிம்பு எப்போதுமே வைரல் மெட்டிரியல் தான். அந்தவகையில் சிம்பு திருமண விழா ஒன்றில் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
மெட்ரோ நடிகர் சிரிஷின் திருமண விழாவில் கலந்து கொண்ட சிம்பு, " ஒரு அப்பா எப்படி தன்னுடைய பெண்ணை பார்த்துக் கொள்வாரோ அதுபோல மணமகன் தன்னை நம்பி வரும் பெண்ணை பார்த்துகொள்ள வேண்டும்.
உங்கள் அப்பாவை எப்படி பாசமாக கவனித்துக் கொள்வீர்களோ அதேபோல நீங்கள் மாப்பிள்ளையை பார்த்துக்கணும்," என சிம்பிளாக அட்வைஸ் செய்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் எல்லாருக்கும் அட்வைஸ் பண்றீங்க நீங்க எப்போ கல்யாணம் பண்ணிக்க போறீங்க? என ஆதங்கமாக சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வீடியோவைப் பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்