1. Home
  2. Cinema News

பாதிக்கப்பட்ட கிரிக்கெட் வீராங்கனைக்கு உதவி செய்த சிவகார்த்திகேயன்.. நெகிழ்ந்த சஜனா..!


Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக ஜொலித்து வருகின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்து இருக்கின்றார். இவரின் திரைப்படங்களை குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்கின்ற அளவுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பிடித்த நடிகராக இருந்து வருகின்றார்.

அமரன் திரைப்படம்: நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கின்றார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. கடந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 360 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் டாப் இடத்திற்கு முன்னேறி இருக்கின்றார் சிவகார்த்திகேயன்.


அப்கம்மிங் படங்கள்: நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இது மட்டும் இல்லாமல் தற்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் அமரன் திரைப்படத்தை போல பராசக்தி திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த திரைப்படமும் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகின்றது. அமரன் திரைப்படம் எப்படி சிவகார்த்திகேயனின் கெரியரில் முக்கிய படமாக அமைந்ததோ, அதேபோல பராசக்தி திரைப்படமும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் உதவி : கேரள மாநிலம் வயநாடு பழங்குடியினத்தை சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை சஜீீவன் சஜனா இந்திய மகளிர் அணியில் நட்சத்திர ஆட்டக்காரராக இருந்து வருகின்றார். இவர் தற்போது இஎஸ்பின் என்கின்ற ஊடகத்துக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் சிவகார்த்திகேயன் செய்த உதவி குறித்து பேசி இருந்தார்.

2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் வயநாடு பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. அப்போது தன்னுடைய கிரிக்கெட் உபகரணங்கள் அனைத்துமே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் என் கெரியர் என்ன ஆகும் என்ற பயம் இருந்தது. அப்போதுதான் சிவகார்த்திகேயனிடம் இருந்து தனக்கு அழைப்பு வந்தது.


அவர் என்னிடம் உனக்கு ஏதாவது உதவி வேண்டுமா? என்று அன்புடன் கேட்டார். அப்போது என் கிரிக்கெட் கிட் முழுவதுமாக அடித்துச் சென்றுவிட்டது. எனக்கு புதிய ஸ்பைக்குகள் தேவை என்று கேட்டேன். ஒரு வாரத்திற்குள் எனக்கு புதிய ஸ்பைக்குகள் அனுப்பி வைத்தார். அந்த நேரத்தில் நான் சேலஞ்சர் டிராபிக்கும் செல்லவேண்டிய சூழல் இருந்தது. அங்குள்ள அனைவரும் என் குடும்ப சூழ்நிலை குறித்து நன்கு அறிந்தவர்கள் அந்த சமயத்தில் அனைவரும் எனக்கு ஆதரவாகவும், உதவியாகவும் இருந்தார்கள் என்று கூறியிருந்தார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.