ரெண்டே படம்தான்! எல்லாத்தையும் ஓரங்கட்டி முன்னுக்கு வந்த சூரி.. சிம்பு நிலைமை இப்படியா போகும்?
இன்று கோலிவுட்டில் தன் அடுத்தடுத்த படங்களின் மூலம் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்து வருகிறார் நடிகர் சூரி. வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் மிகவும் பிரபலமான சூரி சின்னத்திரை தொடரில்தான் அவருடைய சினிமா பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். சன் டிவியில் மிகவும் பிரபலமான சீரியலான திருமதி செல்வம் சீரியலில் செல்வம் கேரக்டரில் நடித்த சஞ்சீவ்வுக்கு உதவியாளராக நடித்திருப்பார் சூரி.
அதன் பிறகு சிறு சிறு வேடங்களில் நடித்த சூரி வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அந்த பரோட்டா சீனில் நடித்து அதன் மூலம் பிரபலமானார். அதிலிருந்தே பரோட்டா சூரி என அழைக்கப்பட்டார். அந்தப் படத்திற்கு பிறகு விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் மெயின் நகைச்சுவை நடிகராக நடித்தார்.
எப்படி வடிவேலு, விவேக் என காமெடியில் கலக்கி வந்தார்களோ அதை போல சூரி, சந்தானம் என காமெடியில் கோலோச்சி வந்தார்கள். காமெடியையும் தாண்டி சூரிக்குள் ஒரு நடிகன் இருக்கிறான் என்பதை வெற்றிமாறன் அடையாளம் கண்டு விடுதலை படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தார்.
அந்தப் படத்தின் ரிசல்ட் என்ன என்பது அனைவருக்கும் தெரியும் .படத்தின் கதையையும் தாண்டி சூரியின் நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். அதை தொடர்ந்து ஹீரோவாகவே நடிக்க வரிசையாக படங்களின் வாய்ப்பு சூரியை தேடி வந்தது. ஏற்கனவே விடுதலை 2 படம் தயாராகி வருகிறது. அதற்கு முன் கருடன் திரைப்படம் சூரியின் நடிப்புக்கு தீனி போட்ட படமாகவே அமைந்தது.
அடுத்ததாக சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி என்ற படத்திலும் நடித்திருக்கிறார் சூரி. இந்த நிலையில் நேற்று தயாரிப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றதாம். நடிகர்களை பல்வேறு வகையாக தரம் பிரித்து வைத்திருக்கிறார்கள். அதாவது ஏ கிரேடில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் ஆகியோர் அடங்குவர். இவர்கள் படம் வெளியாகி 8 வாரங்கள் கழித்துதான் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுமாம்.
அடுத்ததாக பி கிரேடில் சூரி, சிம்பு, ஜெயம் ரவி இவர்களை வரிசைப்படுத்தியிருக்கிறார்கள்.இவர்களின் படங்கள் வெளியாகி 6 வாரங்கள் கழித்து ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுமாம். இப்படி முன்னணி நடிகர்களுடன் அந்தப் பட்டியலில் சூரியும் இப்போது இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கிட்டத்தட்ட குழந்தை நட்சத்திரமாக சினிமா பயணத்தை ஆரம்பித்த சிம்புவே பி கிரேடில்தான் இருக்கிறார். ஆனால் ரெண்டே படங்களில் ஹீரோவாக நடித்து மக்கள் அபிமானங்களை பெற்று சூரி சிம்புவுக்கு இணையாக வளர்ந்துவிட்டாரே என பாராட்டி வருகிறார்கள்.