காதலர் தினத்துக்கு இப்படி ஒரு பாட்டா!.. சூர்யாவின் கண்ணாடி பூவே பாடல் எப்படி இருக்கு?..

Actor Suriya: தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து மிகப்பெரிய தோல்வி படமாக மாறியது. நடிகர் சூர்யாவின் கெரியரிலேயே பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களை அந்த அளவுக்கு கவராத காரணத்தால் தோல்வியை சந்தித்தது. கங்குவா படத்தின் தோல்விக்கு பிறகு நடிகர் சூர்யா கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றார்.
ரெட்ரோ திரைப்படம்: கங்குவா திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் சூர்யா கமிட்டான திரைப்படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹேக்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் காதல் கலந்த ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த திரைப்படத்தை வரும் மே 1ஆம் தேதி கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் புதுவிதமாக படத்தை புரமோஷன் செய்து வரும் படக்குழுவினர் ஒவ்வொரு வாரமும் படத்தின் பிடிஎஸ் காட்சிகளை காமிக்ஸ் வடிவில் வெளியிடுவதற்கு திட்டமிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு காமிக்ஸ் கதையை வெளியிட்டு இருந்தார்கள்.
கண்ணாடி பூவே பாடல்: இந்நிலையில் தற்போது ரெட்ரோ திரைப்படத்திலிருந்து கண்ணாடிப் பூவே என்கின்ற பாடல் வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கின்றார். ரெட்ரோ திரைப்படத்திலிருந்து வெளியாகும் முதல் சிங்கிள் என்பதால் நிச்சயம் ஒரு குத்து பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து காதலர் தினத்திற்கு முன்பு பாடல் வெளியாகும் நிலையில் ஒரு காதல் பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காதல் தோல்வி பாடலை இறக்கி இருக்கிறார்கள். கண்ணாடி பூவே என தொடங்கும் இந்த பாடலை சந்தோஷ நாராயணன் பாடி இருக்கின்றார். மேலும் இப்பாடல் ஜெயிலுக்குள் சூர்யா இருக்கும் போது தனது காதலியை நினைத்து உருக்கமாக பாடும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
ஏற்கனவே காதல் தோல்வி பாடலுக்கு பெயர் போனவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளிவந்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் 'அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல' என்ற பாடல் தற்போது வரை எவர்கிரீன் பாடலாக இருந்து வரும் நிலையில் அந்த வரிசையில் இந்த பாடலும் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.