Kanguva: கிரியேட்டர்ஸ், டைரக்டர்ஸ் எல்லாம் கேட்டுக்கோங்க?!.. வாயப்பொளந்து பார்ப்பீங்க... ஓவர் ஹைப் ஏத்தும் சூர்யா!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-08 11:31:03  )
kanguva
X

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா தற்போது கங்குவா என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வந்தது. பீரியட் படமாக உருவாக்கி இருக்கும் இப்படம் 700 வருடத்திற்கு முன்பு நடந்த கதையை கூறும் படமாக இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

மேலும் இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டிருப்பதாகவும், இரண்டு பாகத்தையும் இயக்குனர் சிறுத்தை சிவா எடுத்து முடித்ததாகவும் கூறப்படுகின்றது. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் இப்படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வலுடன் காத்திருக்கிறார்கள். நடிகர் சூர்யாவுடன் இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.

மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கின்றார். படம் வெளியாவதற்கு இன்னும் சிறிது நாட்கள் இருக்கும் காரணத்தால் படக்குழுவினர் தொடர்ந்து ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் மிகப்பிரமாண்டமாக ஆடியோ லான்ச் நடைபெற்ற முடிந்தது.

அதைத் தொடர்ந்து படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சூர்யா பல இடங்களுக்கு சென்று படம் குறித்து ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள். நடிகர் சூர்யா கடந்த சில தினங்களாகவே தமிழ்நாடு, கேரளா, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ப்ரோமோஷனில் ஈடுபட்டு வருகின்றார்.

kanguva

kanguva

இந்நிலையில் இன்று பட வெளியீட்டுக்கு முந்தைய பிரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் சூர்யா, இயக்குனர் சிறுத்தை சிவா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சூர்யா தெரிவித்திருந்ததாவது 'கங்குவா திரைப்படத்தின் கதை 700 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கின்றது.

வழிபடும் கடவுள் தீயாக இருந்தால் எப்படி இருக்கும்? நீராக இருந்தால் எப்படி இருக்கும்? ரத்தமாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதை சொல்லும் படமாகவும், அவர்களுக்குள் நடக்கும் விஷயத்தை எடுத்துக் கூறும் படமாகவும் கங்குவா தயாராகி இருக்கின்றது. மேலும் ஒரு சண்டை படமாக மட்டும் இல்லாமல் மன்னிப்பை பற்றி பேசக்கூடிய படமாக கங்குவா இருக்கும்.

இந்த திரைப்படத்திற்காக 170 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. அந்த ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமாக அமைய டீம் ஒர்க் காரணம். தமிழ் சினிமாவில் இப்படியும் படம் செய்ய முடியும் என்பதற்கு கங்குவா ஒரு சிறந்த அடையாளம். இந்திய சினிமாவில் இருக்கும் கிரியேட்டர்ஸ்கள் டைரக்டர்கள் இப்படம் வெளியான பிறகு வாயை பிளந்து பார்க்கப் போகிறார்கள்.

இது எப்படி சாத்தியமானது என்று கேட்கப் போகிறார்கள்' என்று அந்த நிகழ்ச்சியில் சூர்யா பேசியிருக்கின்றார். இது படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த எதிர்பார்ப்பை நவம்பர் 14ஆம் தேதி கங்குவா திரைப்படம் பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Next Story