சூர்யா ஜெயிச்சா உலகமே ஜெயிக்கும்! வருஷத்திற்கு சொசைட்டிக்காக இவ்வளவு கோடி செலவு பண்றாரா?

by ராம் சுதன் |

கோலிவுட்டின் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே சிறுத்தை சிவாவுடன் இணைந்து கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் சூர்யா அந்தப் படத்தில் இதுவரை இல்லாத அளவு வித்தியாசமான கெட்டப்பில் மிரட்டியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

சூர்யாவின் கெரியரிலேயே கங்குவா திரைப்படம்தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாகும். அதனால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் பிரபல யூடியூப்பரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவருமான அபிஷேக் சூர்யாவை பற்றி பல விஷயங்களை கூறினார்.

அதாவது இந்திய சினிமாவிலேயே முதன் முதலில் 100 கோடி வரை வசூலித்த திரைப்படமாக ஹிந்தியில் வெளியான கஜினி திரைப்படம்தான அமைந்தது என்றும் அது யாரால் என்றால் சூர்யா நடித்த கஜினியால்தான் என கூறினார். சூர்யாவை கஜினியில் நினைக்கும் போது ரக்கடு தோற்றத்தில் பேர் பாடியை வெளிப்படுத்தி மாஸாக தோன்றியிருப்பார் என அபிஷேக் கூறினார்.

மேலும் தெலுங்கு மார்கெட் ஒப்பன் பண்ணினது, கேரளாவில் டாப் ஹீரோவாக இருக்கிறது என அடுத்தடுத்து அவருடைய ரேஞ்சை அதிகரித்துக் கொண்டேதான் இருந்தார். மேலும் ஓடிடி மக்கள் மத்தியில் இந்தளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அதற்கு காரணமும் சூர்யாதான் என கூறினார். ஏனெனில் அமேசானை அவருடை 2டி குத்தகைக்கு எடுத்து ஒரு தயாரிப்பாளராக சூர்யா எடுத்த முடிவு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் அபிஷேக் கூறினார்.

அதாவது சூரறைப் போற்று படத்தை எப்படி நேரிடையாக ப்ரீமியரில் கொடுத்தார் என்று நிறைய பேர் அந்த நேரத்தில் கேட்டார்கள் என்றும் ஆனால் இப்போது பல தயாரிப்பாளர்களே ஏன் படத்தை வாங்க வரவில்லை என்று கேட்பதாக அபிஷேக் கூறினார். சூரறைப் போற்று படத்திற்காக மட்டுமில்லாமல் அந்த நேரத்தில் 2டியின் இரண்டு மூன்று படங்களும் ஓடிடியில் வெளியானது.

இதன் பிறகுதான் ஆடியன்ஸுக்கே ஓடிடி பற்றி தெரிய ஆரம்பித்தது என அபிஷேக் கூறினார். ஓடிடியில் இப்படி ஒரு டீல் ஸ்டிரைக் பண்ணலாம் என தெரிய ஆரம்பித்ததற்கு காரணமே சூர்யாதான் என்றும் அபிஷேக் கூறினார். அதோடு ஒரு கலைக்குடும்பமாக விளங்கும் சூர்யாவின் குடும்பம் ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 20 கோடியை சமூக நல பணிக்காக மட்டும் செலவிடுவதாக அபிஷேக் தெரிவித்திருக்கிறார். கமல் ஜெயித்தால் சினிமா நன்றாக இருக்கும். சூர்யா ஜெயித்தால் இந்த உலகமே நன்றாக இருக்கும் என்றும் அபிஷேக் கூறினார்.

Next Story