ஏஐ கிடையாது..அமெரிக்காவும் போகல! அப்படி எப்படி சாத்தியமாச்சு சூர்யாவின் சிறுவயது தோற்றம்?

தமிழ் சினிமாவில் சூர்யா ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒரு தயாரிப்பாளராக நடிகராக இந்த கோலிவுட்டில் மிகச்சிறந்த கலைஞராக இருந்து வருகிறார். நடிகர் என்பதையும் தாண்டி சமூக அக்கறை கொண்ட ஒரு நல்ல மனிதராகவும் இருந்து வருகிறார் சூர்யா.

தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். சூர்யா நடிப்பில் இந்த இரு படங்களின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

அதுவும் கங்குவா திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் 12 மொழிகளில் தயாராகுவதால் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. சமீபகாலமாக விதவிதமான கெட்டப்களை போட்டுக் கொண்டு சூர்யா வித்தியாசமான கதைகளம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சூர்யா நடித்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆதவன். அந்தப் படத்தில் சூர்யா சிறுவயது கேரக்டரில் நடித்திருப்பார். இப்போது விஜய் கோட் படத்திற்காக ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி யங் விஜயாக நடிக்கிற மாதிரி ஆதவன் படத்திலும் சூர்யா நடித்திருப்பார்.

ஆனால் ஆதவன் படத்தில் எந்தவொரு ஏஐ தொழில் நுட்பமும் பயன்படுத்தவில்லை. அப்புறம் எப்படி இள வயது சூர்யாவின் தோற்றம் அமைந்தது என்பதை பற்றி ரவிக்குமாரே கூறியிருக்கிறார். படப்பிடிப்பின் போது சூர்யாவையும் ஒரு சிறுவயது சிறுவனையும் நடிக்க வைத்திருக்கிறார்கள்.

அவர்கள் பின்னாடி ஒரு க்ரீன் மேட்டை பயன்படுத்தியிருக்கிறார்கள். பின் அந்த சிறுவனின் முகத்திற்கு பதிலாக சூர்யாவின் முகத்தை பொருத்தி காட்சியை எடிட் செய்திருக்கிறார்கள். அதற்காக வெறும் 28 லட்சமே செலவானதாக ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார். பின்னர் டப்பிங் பேசும் போதுதான் சூர்யா தன்னுடைய யங் வெர்ஷனை பார்த்து ஆச்சரியப்பட்டாராம்.

Related Articles
Next Story
Share it