Categories: latest news

என் நெஞ்சில் குடியிருக்கும் என் தலைவா… 7 மணிநேரம் விஜய்க்காக தாடி பாலாஜி செய்த தியாகம்

நடிகர் தாடி பாலாஜி விஜயின் த.வெ.க. கட்சியில் இணைந்ததில் இருந்தே பேசுபொருளாக ஆகி விட்டார். முதலில் விஜயின் கட்சி செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் கால்களில் விழுந்தார். கட்சியில் இணையும் அந்த நேரம் பரபரப்புக்குள்ளானார். காலில் விழும் கலாச்சாரத்தை வெறுக்கும் விஜயின் கட்சியிலேயே இப்படி நடக்கிறதே என்று பேசினார்கள்.

அந்த வகையில் அவருக்கு சினிமாவில் மார்க்கெட் இல்லாததால் தான் இப்படி எல்லாம் செய்கிறார் என்றார்கள். ஆனால் அவர் தற்போது விஜய் 69ல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் சமீபத்தில் அவரது நெஞ்சில் விஜயின் உருவத்தைப் பச்சைக் குத்தியுள்ளார். இதுகுறித்து அவர் என்ன சொல்றாருன்னு பார்ப்போமா…

கிட்டத்தட்ட 7 மணி நேரம் வலியைத் தாங்கிக்கிட்டு விஜய்க்காக இருந்துருக்கீங்க. சாரோட டாட்டூவைப் போடும்போது ரொம்ப வலியை தாங்கி இருப்பீங்க. எப்படி இருந்தது இந்த அனுபவம் என்று கேட்கிறார் நிருபர் ஒருவர். அதற்கு தாடி பாலாஜி சொன்ன பதில் இதுதான்.

வலியைத் தாண்டி ஒரு சந்தோஷம். என்; நண்பர், த.வெ.க.வின் தலைவர் போட்டோவை நெஞ்சில் குத்திய இருக்கோம் என்பது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. என் நெஞ்சில் குடியிருக்கும் எங்கள் தலைவா என்று விஜயின் டாட்டூவுக்குக் கீழ் எழுதப்பட்டுள்ளது.

விஜய் இதைக் கேள்விப்பட்டுப் பார்க்க வரச் சொன்னால் போய்ப் பார்ப்பேன். இப்ப இருக்குற வலி, அவர் கூட நிக்கும்போது தெரியாது. இதைப் பார்த்தாருன்னா ‘அழகா இருக்கு. எப்படி… எங்கே போட்டீங்க’ன்னு கேட்பாரு. அதைத் தாண்டி ‘இவ்ளோ பெரிய ரிஸ்க் எடுக்கணுமா’ன்னு கேட்பாரு.

சும்மா சட்டையில போட்டுக் கழட்டிட்டு வேற சட்டைப் போட்டுக்கறது. சட்டையில அவரோடஉருவத்தை நிறைய பேரு குத்துறாங்க. அதைத் தாண்டி ஒரு யுனிக்கா டிபரன்டா இருக்கணும்னு நினைச்சேன்.

எங்க ஹார்ட்டோட இருக்கணும்னு நினைக்கிறேன். முதல்ல மகளோட பேரைக் குத்தியிருக்கேன். இந்தப் பக்கம் வீட்ல அவங்களோட பேரைக் குத்திருக்கேன். அப்ப இருந்த சந்தோஷம் வேற. இப்ப பயங்கர சந்தோஷம் என்கிறார் தாடி பாலாஜி.

பச்சைக்குத்திக் கொள்வது அந்தக் காலத்தில் கலாச்சாரமாக இருந்தது. அதை தற்போது நவீன பாணியில் டாட்டூஸ் என்ற பெயரில் அழைக்கிறார்கள். இது நவநாகரீக கலாச்சாரம் என்று சொல்லி பழைய கலாச்சாரத்தை வெறுப்பவர்கள் இந்த விஷயத்தில் மட்டும் பழைய பாணியை இந்த விஷயத்தில் கடைபிடிப்பது ஏனோ?

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

3 minutes ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

2 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

5 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

17 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

18 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

18 hours ago