கோட் பார்த்துட்டு விஜய்க்கு வந்த பயம்!.. அட வெங்கட்பிரபுகிட்ட இப்படியா சொன்னாரு?!...
Goat: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருப்பவர் விஜய். நாளைய தீர்ப்பில் துவங்கிய இவரின் திரைப்பயணம் இப்போது வரை நிற்கவில்லை. துவக்கத்தில் தடுமாறினாலும் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற படங்களின் வெற்றி அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது.
கில்லி படத்தின் கலெக்ஷன் விஜயை ஒரு வசூல் சக்ரவர்த்தியாக மாற்றியது. அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் வசூலை கொடுக்கும் ஒரு முக்கிய நடிகராக விஜய் இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர், லியோ என எல்லா படங்களுமே நல்ல வசூலை கொடுத்தது.
ஆனால், லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதற்கு காரணம் அப்படத்திற்கு இருந்த அதிக எதிர்பார்ப்புதான். சமூகவலைத்தளங்களில் பலரும் லியோ படம் பற்றியே பேசி வந்தனர். படத்தின் 2ம் பாகம் ரசிகர்களை கவரவில்லை. இந்நிலையில்தான் வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் விஜய்.
அஜித்துக்கு மங்காத்தா எனும் ஹிட் படம் கொடுத்தவர் என்பதால் விஜயை வைத்து என்ன செய்யப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடம் எழுந்தது. அதோடு, விஜய்க்கு இரட்டை வேடம். அதில் மகன் விஜயை ஏஜிங் தொழில்நுட்பம் மூலம் 20 வயது போல் காட்டப் போகிறார்கள் என சொல்ல ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்தது.
படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அதிலும் முதல் பாதியை எடிட்டிங் மற்றும் டப்பிங்கோடு சேர்த்து வெங்கட்பிரபு முடித்துவிட்டார். சமீபத்தில் அதை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு போட்டி காட்டியுள்ளார். அவருக்கு மிகவும் பிடித்திருந்ததாம். இந்நிலையில்தான் இப்போது படத்தின் முதல் பாதியை விஜயும் பார்த்திருக்கிறார்.
படத்தை பார்த்து விட்டு நன்றாக இருப்பதாக பாராட்டினாலும் விஜய்க்கு ஒரு பயமும் வந்திருக்கிறது. முதல் பாதி நன்றாக இருக்கிறது. 2ம் பாதியும் நன்றாக இருக்க வேண்டும். எனவே ‘படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. பாத்து பண்னுங்க’ என சொன்னாராம். எனவே, படத்தின் 2ம் பாதியை சிறப்பாக அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறாராம் வெங்கட்பிரபு.