வேட்டையன் படம் பார்க்க வந்த விஜய்! கவர் பண்ணாலும் கண்டுபுடிச்சிட்டாங்களே.. வைரலாகும் வீடியோ
வேட்டையன் படம் பார்க்க வந்த விஜய். யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட். தச. ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் வேட்டையன் திரைப்படம் இன்று உலகெங்கிலும் ரிலீஸாகியிருக்கிறது. படத்திம் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து பகத் பாசில், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் , அபிராமி போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்,
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் ரிலீஸாகியுள்ளது. ஆனால் கலவையான விமர்சனத்தையே படம் பெற்று வருகிறது. வழக்கம் போல ரஜினி ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். சில பேர் படம் சுமார் என்றும் கூறிவருகிறார். ஒரு பக்கம் ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இந்த படத்தில் சமூகத்திற்கு தேவையான கருத்தையும் சொல்லியிருப்பதுதான் காரணம்.
ஜெயிலர் படத்தை எடுத்துக் கொண்டால் கதைனு முக்கியமானதாக இருக்காது. படம் முழுக்க பிஜிஎம்மில் ரஜினியை மாஸாக காட்டியிருப்பார்கள். அதைத்தான் ரஜினி ரசிகர்கள் விரும்புகிறார்கள். அதைவிட்டு கருத்து சொல்றேன் . அட்வைஸ் பண்றேனு ரஜினி இறங்கினால் கண்டிப்பாக ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள்.
ஆனாலும் இந்தப் படத்தில் கதையும் இருக்கிறது. மாஸும் இருக்கிறது. படத்தை பார்க்க பல பிரபலங்கள் வருவதை பார்க்க முடிகிறது. ரஜினியின் மனைவி மற்றும் மகள்கள் காலையிலேயே படத்தை பார்க்க வந்து விட்டனர். இன்னொரு பக்கம் தனுஷ் எங்கு இருந்தாலும் ரஜினி படம் என்றால் முதல் ஆளாக ஓடி வந்துவிடுவார். வேட்டையன் படத்தையும் பார்க்க முதல் ஆளாக வந்தார் தனுஷ்.
இந்த நிலையில் வேட்டையன் படத்தை பார்க்க தேவி திரையரங்கத்திற்கு விஜய் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ஆனால் அவர் முகம் தெரியவில்லை. முகத்தை முழுவதுமாக மூடியிருக்கிறார். காருக்குள் பார்த்தால் முழுவதும் கரு நிறமாகத்தான் தெரிகிறது. ஆனால் அது விஜய்தான் என பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகி வருகின்றது.
இதோ அந்த வீடியோ: https://x.com/NewsTamilTV24x7/status/1844277206672912534