கேப்டன் நடிப்பில் வெளியான டாப் 5 திரில்லர் படங்கள்! கொலை நடுங்க வைத்த ‘ஊமை விழிகள்’

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:39:54  )

தமிழ் சினிமாவில் ஒரு உன்னதமான நடிகராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். இவரின் மறைவு திரையுலகத்திற்கு ஒரு பெரிய இழப்பாகவே இருந்தது. எம்ஜிஆரை எந்தளவு ரசிகர்கள் போற்றி வருகிறார்களோ அதே அளவுக்கு இன்று வரை விஜயகாந்தை போற்றி பாராட்டி வருகிறார்கள் மக்கள். அவரின் நினைவிடத்திற்கு நாள்தோறும் சென்று அவரை வணங்கும் மக்களை இப்போது வரை பார்க்க முடிகிறது.

அந்தளவுக்கு ஒட்டுமொத்த தமிழ் நாட்டு மக்களின் நெஞ்சங்களில் ஆழமாக குடிபெயர்ந்திருக்கிறார் விஜயகாந்த்.அவருடைய மகன் விஜயபிரபாகரன் அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார். இன்னொரு மகனான சண்முக பாண்டியன் சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான திரில்லர் மற்றும் ஆக்‌ஷன் கதையில் அமைந்த படங்களை பற்றித்தான் பார்க்க இருக்கிறோம்.

எப்போது டிவியில் போட்டாலும் சளிக்காமல் நம்மை பார்க்க தூண்டும் விஜயகாந்தின் டாப் 5 திரில்லர் படங்களைத்தான் பார்க்க இருக்கிறோம். 1991 ஆம் ஆண்டு வெளியான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் விஜயகாந்துக்கு 100வது படமாக அமைந்தது. அதுவும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. காட்டில் வில்லத்தனம் பண்ணிக் கொண்டு இருக்கும் மன்சூர் அலிகானை வேட்டையாடும் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார்.

அடுத்ததாக 1986 ஆம் ஆண்டு வெளியான ஊமை விழிகள் படத்தை சொல்லலாம். தீன தயாளன் கேரக்டரில் போலீஸ் அதிகாரியாக வரும் விஜயகாந்த் சோழா பிக்னிக் வில்லேஜில் நடக்கும் மர்மமான கொலைகளை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை. இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தியது.

அடுத்ததாக 1984 ஆம் ஆண்டு மணி வண்ணன் இயக்கத்தில் வெளியான நூறாவது நாள் திரைப்படத்தை குறிப்பிடலாம். நளினிக்கு வரும் மர்மமான கனவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு தரமான க்ரைம் படமாக நூறாவது நாள் திரைப்படம் அமைந்தது.

அடுத்ததாக புலன் விசாரணை படத்தை சொல்லலாம். இந்தப் படத்தில் வில்லனாக வரும் ஆனந்த் ராஜை பிரபல ரவுடி ஆட்டோ சங்கருடன் ஒப்பிட்டு வடிவமைத்திருப்பார்கள். மேலும் சில மருத்துவமனையில் நடைபெறும் உடல் உறுப்பு திருட்டுக்களை மையப்படுத்தி வந்த ஒரு தரமான இன்வெஸ்டிகேஷன் படமாக புலன் விசாரணை திரைப்படம் அமைந்தது.

அடுத்ததாக கடலில் மர்மமான முறையில் கடலில் சில பேர் இறந்துபோகிறார்கள். அதற்கான காரணத்தை திறமையான நேவி ஆஃபிஸர் கதாபாத்திரத்தில் வரும் விஜயகாந்த் எப்படி கண்டிபிடித்தார் என்பதுதான் உளவுத்துறை படத்தின் கதை. இது 1998 ஆம் ஆண்டு வெளியான பக்கா ஆக்‌ஷன் கலந்த க்ரைம் திரில்லர் படமாகும்.

Next Story