விடாமுயற்சிக்கு அம்பாசிடரே விக்ரம்தான்! எந்த நடிகரால இப்படி பண்ண முடியும்?

ஒட்டுமொத்த இந்திய சினிமாவுமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படமாக தங்கலான் திரைப்படம் அமைந்திருக்கிறது. ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம்தான் தங்கலான். இந்தப் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலகெங்கிலும் ரிலீஸாக இருக்கிறது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

சமீபத்தில்தான் தங்கலான் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது விக்ரம் மிகவும் எமோஷனலாக பேசி அனைவரையும் உருக வைத்தார். நடக்கவே முடியாது என்று டாக்டர் சொன்னாலும் என்னால் முடியும் என தொடர்ந்து போராடி சினிமா மீதுள்ள மோகத்தால் மீண்டு வந்ததாக கூறியிருந்தார்.

மேலும் சினிமாவில் 10 வருடம் போராட்டத்திற்கு பிறகுதான் நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது என்றும் கூறியிருந்தார். ஒரு வேளை 10 வருடத்திற்கு பிறகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் என்ன செய்திருப்பீர்கள் என்ற கேள்விக்கு இப்போது வரை போராடுவேன் என்றும் கூறியிருந்தார். அந்தளவுக்கு சினிமா மீது விக்ரமுக்கு பேஷன் இருந்ததுதான் காரணம்.

மேலும் தங்கலான் ப்ரோமோஷனுக்காக விக்ரம் தன்னை எப்படியெல்லாம் தயார்படுத்தி வருகிறார் என தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியிருக்கிறார். எல்லா ஊர்களுக்கும் சென்று அங்குள்ள மக்களிடம் படத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றும் அவர்களோடு சேர்ந்து உரையாட வேண்டும் என்றும் விக்ரம் கூறியிருக்கிறாராம்.

எந்த ஊர்களுக்கெல்லாம் போகிறோமோ அங்கு இருக்கும் மால்களுக்குத்தான் செல்ல வேண்டும். அப்போதுதான் ஆயிரக்கணக்கான ரசிகர்களை சந்தித்து பேசமுடியும் என விக்ரம் கூறினாராம். விக்ரமை சமாளிக்கிறதே பெரிய டாஸ்க்காக இருக்கிறது என தனஞ்செயன் கூறினார்.

மேலும் நாளையில் இருந்து கோவை , மதுரை, திருச்சி , திருநெல்வேலி போன்ற ஊர்களுக்கு ப்ரோமோஷன் ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். ஆனால் விமான வசதி சரிபட்டு வரவில்லை என்று விக்ரமுக்கு தெரியவந்ததும் காரிலேயே டிரைவ் பண்ணி போகலாம் என்று விக்ரம் கூறியிருக்கிறாராம். எந்தளவுக்கு படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என விக்ரம் நினைக்கிறார் பாருங்க என தனஞ்செயன் கூறினார்.

மேலும் விக்ரமை பொறுத்தவரை கடின உழைப்புக்கு ஒரு உதாரணமாக திகழ்கிறார். அதுமட்டுமில்லாமல் விடாமுயற்சிக்கு இலக்கணாமாகவும் இருக்கிறார். அதாவது விடாமுயற்சிக்கு ஒரு ப்ராண்ட் அம்பாசிடரே விக்ரம்தான் என்று தனஞ்செயன் கூறினார்.

Related Articles
Next Story
Share it