அவருக்குனே அளவெடுத்து செஞ்ச படம்... இப்படி மிஸ் பண்ணிட்டாரே!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம்வரும் விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். கோலார் தங்கச்சுரங்க பின்னணியில் இப்படத்தின் கதையை ரஞ்சித் அமைத்திருக்கிறார். இதனால் படத்தின் மீதான ஆர்வம் எக்கச்சக்கமாக ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
சமீபத்தில் வெளியான தங்கலான் படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக படத்தில் விக்ரமின் தோற்றம் படத்தின் மீதான ஆர்வத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ளது.
தமிழில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் கூட விக்ரமுக்கு என ஒரு மார்க்கெட் இருக்கிறது. செல்லமாக சீயான் என அழைக்கப்படும் விக்ரம் பல்வேறு தோற்றங்களில் நடித்து அசத்தியவர். இதன் காரணமாக தேசிய விருதும் அவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தநிலையில் சமீபத்தில் வெளியான தகவல் விக்ரம் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது. அதாவது முதலில் அயன் படத்தில் நடிக்க விக்ரமைத் தான் கே.வி.ஆனந்த் அணுகினாராம். ஆனால் சிலபல காரணங்களால் விக்ரம் அப்படத்தில் நடிக்க முடியாமல் போய் விட்டது.
இதையடுத்து தான் சூர்யாவிற்கு அந்த வாய்ப்பு கிடைக்க மனிதர் அப்படத்திற்கு பின் சரசரவென வளர்ந்து விட்டார். அதோடு இன்று தமிழில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் நடத்தும் அளவிற்கு சூர்யாவின் வளர்ச்சி இருக்கிறது.
ஒருவேளை அயன் படத்தில் விக்ரம் நடித்திருந்தால் விக்ரமிற்கு அது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல கே.வி.ஆனந்தின் கோ படத்தில் சிம்பு நடிக்க இருந்து பின்னர் அப்படத்தில் ஜீவா நடித்து அது பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.