எல்லாத்தையும் நியாபகம் வச்சிருப்பார் அஜித்! சாதாரணமா நினைக்காதீங்க.. நடிகை சொன்ன சீக்ரெட்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:02  )

பொதுவாக அஜித் ஒரு பிரமிக்க வைக்கும் மனிதராகவே அனைவராலும் அறியப்படுகிறார். அவரிடம் ஏதோ ஒரு அற்புதம் இருப்பதாகவும் அவருடன் நெருங்கி பழகிய பல பேர் சொல்லியிருக்கிறார்கள். அது ஒரு மேஜிக் என்றே சொல்லலாம். சாதாரண மனிதர் கூட தன்னை பற்றி வரும் விமர்சனங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பதிலடி கொடுக்க நினைப்பார்.

ஆனால் அஜித் இத்தனை விமர்சனங்களையும் எப்படி கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்பதுதான் ஆச்சரியம். ஆனால் அதையெல்லாம் தாண்டி சினிமாவில் அனைவராலும் மதிக்கக் கூடிய இடத்தில் இருக்கிறார் என்பதுதான் உண்மை. படப்பிடிப்பில் அவருடன் நடித்த நடிகர்கள், நடிகைகள் , தொழில் நுட்ப கலைஞர்கள் என அனைவருமே அஜித் பழகுவதில் தங்கமானவர் என்றுதான் சொல்கிறார்கள்.

ஒருவரை பற்றி தெரியாமல் புறங்கூறுவது தவறு என அஜித் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளலாம். அவருடன் பழகி பார்த்தால் தான் தெரியும். அந்த வகையில் நடிகை அபிராமி அருணாச்சலம் அஜித்தை பற்றி கூறிய தகவல் பிரமிப்பை ஏற்படுத்துகின்றது.

பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் அபிராமி அருணாச்சலம், இப்போது சீரியலில் நடித்து வருகிறார். அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்தப் படத்தின் போது அஜித்துடன் ஏற்பட்ட அனுபவங்களை பற்றி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் அபிராமி.

அஜித்துடன் பேசும் போது நிறைய விஷயங்கள் தனக்கு சொன்னதாகவும் அவரிடம் பழகியது தன்னுடைய பாக்கியம் என்றும் அபிராமி கூறினார். அஜித் எனக்கு சொன்ன விஷயங்களில் சிலவற்றை என் வாழ்க்கையில் கடைபிடித்து வருகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

அஜித்தை மறுமுறை சந்திக்கும் போது முன்பு எங்களுக்குள் நடந்த உரையாடல்களை பற்றி கண்டிப்பாக பேச வேண்டும் என்றும் கூறினார். அதுமட்டுமில்லாமல் அவருடன் சில நேரம் பேசினாலே போதும் அடுத்த முறை நம்மை சரியான முறையில் அவர் நியாபகம் வைத்திருப்பார். முன்பு என்னெல்லாம் பேசினோம் என்பதையும் அப்படியே நியாபகம் வைத்திருப்பார் என்று அபிராமி கூறினார்.

Next Story