இதே கேள்வியை விஜய்க்கிட்ட கேட்பீங்களா.. ஓவரா வெயிட் போட்டுட்டீங்களே ஏன்?.. கடுப்பான இனியா!..
வாகை சூடவா படத்தில் இருந்து நடித்து வரும் நடிகை இனியா சமீப காலமாக உடல் எடை அதிகரித்து நடித்து வருவதால் ஹீரோயினாக நடிக்க முடியாமல் அக்கா கேரக்டர், அம்மா கேரக்டர் என நடிக்கும் நிலைக்கு சென்று விட்டாரே என பத்திரிகையாளர் சந்திப்பில் சில பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கடுப்பான இனியா கொந்தளித்து பேசியுள்ளார்.
எனக்கு ஷோல்டரில் இன்ஜுரி ஆகிடுச்சு, உடலில் சில பாதிப்புகளுக்காக லேசர் சிகிச்சை எடுத்து வருகிறேன். முன்னணி ஹீரோயின்கள் பலர் இப்போ காணாமல் போயுள்ளனர். என்னை பொறுத்தவரையில் நல்ல நடிகையாக இருந்தால் எத்தனை காலம் வேண்டுமானால் திரைத்திரையில் நீடித்து இருக்கலாம்.
வெறும் கிளாமர் ஹீரோயினாக இருந்து சில ஆண்டுகளில் காணாமல் போவதை விட நல்ல நடிகையாக இருந்து தொடர்ந்து கடைசி வரை நடித்துக் கொண்டே இருப்பேன் என பத்திரிகையாளரின் கேள்விக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் நடிகை இனியா.
மேலும், ஸ்வீட்டி நாட்டி கிரேஸி படத்தில் நடித்த சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை ராதாவும் அந்த கேள்விக்கு கடுப்பாகி பதில் அளித்துள்ளார். மேலும், ஸ்வீட்டி நாட்டி கிரேஸி என தமிழ்நாட்டில் இருந்துக் கொண்டு ஆங்கில டைட்டிலில் படம் பண்ணியிருக்கீங்களே ஏன்? என்கிற கேள்விக்கு பதில் அளித்த நடிகை ராதா, இதே கேள்வியை விஜய்யின் மாஸ்டர், பீஸ்ட், லியோ, கோட் உள்ளிட்ட படங்களுக்கு கேட்டு இருக்கீங்களா? என பதில் கேள்வி எழுப்பினார்.
மாஸ்டர் படத்துக்கு பிரஸ் மீட் வைக்கவில்லை, பிரஸ் மீட்டுக்கு விஜய் வந்தால் நிச்சயம் அவரிடமும் இந்த கேள்வியை எழுப்புவோம் என பத்திரிகையாளர் பதில் அளித்த நிலையில், அந்த இடமே பரபரப்பானது.
தமிழ் மற்றும் தெலுங்கில் படம் பண்றோம் அதனால் தான் இந்த ஆங்கில டைட்டில் மற்றபடி ஒன்றுமில்லை என படத்தின் நாயகன் தனுஷின் தங்கமகன் படத்தில் நடித்த ஸ்ரீஜித் விளக்கம் கொடுத்து பிரச்சனையை முடித்து வைத்தார்.