ஆளப் பார்த்து எடை போடக் கூடாது! இப்போ பேன் இந்தியா எண்டெர்டெயினர் இவங்கதான்

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இல்லாவிட்டாலும் இவர் நடித்த பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதாகவே இருக்கின்றன. அவர்தான் நடிகை ஸ்ருதிகா. ஸ்ரீ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் ஸ்ருதிகா. முதல் படமே நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்தார். ஆனால் அந்தப் படம் சரியான வரவேற்பை பெறவில்லை.

அதனை அடுத்து ஆல்ப, என்ற படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் அமைந்த செல்லமாய் செல்லமாய் என்றாயடி பாடலை யாரும் மறக்க முடியாது. ஆனால் அந்தப் படமும் அவருக்கு ஹிட் கொடுக்கவில்லை. தொடர்ந்து தித்திக்குதே மற்றும் நள தமயந்தி போன்ற படங்களில் நடித்தார் ஸ்ருதிகா. தமிழ் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் சில படங்களில் நடித்தார்.

சினிமாவில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் திருமணமாகி செட்டிலானார். திருமணத்திற்கு பிறகு ஸ்ருதிகா நடிக்கவே இல்லை. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு குக் வித் கோமாளி என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கு கொண்டு ரசிகர்களிடம் நீங்கா இடம் பிடித்தார். ஸ்ரீ படத்தில் நடித்த ஸ்ருதிகா இது என ஆச்சரியப்படவைத்தார்.

ஏனெனில் அவருக்கே உரிய மழலை பேச்சால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்த நிலையில் ஸ்ருதிகா இப்போது ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். ஹிந்தியில் பிக்பாஸை தொகுத்து வழங்குபவர் நடிகர் சல்மான் கான்,

முதல் நாளே சல்மான் கானை ஆச்சரியப்படுத்தினார் ஸ்ருதிகா. ஸ்ருதிகாவை அறிமுகம் செய்யும் போது பிரபல தமிழ் காமெடியன் ஷோவில் கலந்து கொண்டு வெற்றிபெற்றவர் ஸ்ருதிகா என சல்மான்கான் அறிமுகம் செய்தார். அதற்கு ஸ்ருதிகா ‘அந்த ஷோவுக்கு முன் நான்கு தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறேன். ஆனால் அந்த நான்கு படங்களுமே பாக்ஸ் ஆஃபிஸ் தோல்வி’ என கூறினார்.

இதை கேட்டதும் சல்மான் கான் விழுந்துவிழுந்து சிரித்தார். வார இறுதி நாளான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் சல்மான் கான் வரும் நாள் என்பதால் நேற்று சல்மான் கான் வந்து ஸ்ருதிகாவிடம் ‘வீட்டுக்கு போலாமா’ என கேட்டார். அதற்கு ஸ்ருதிகா ‘இன்னும் இரண்டு மூன்று வாரங்கள் இருந்துவிட்டு போறேனே’ என காமெடியாக கூற அனைவரும் சிரித்தனர்.

மேலும் ‘உங்க கணவரிடம் இருந்து மெசேஜ் வந்தது. ஏதோ மெடிக்கல் எமர்ஜென்சியாம். அதனால் பாங்காங் போகிறாராம்’என சல்மான் கூற அதற்கு ஸ்ருதிகா ‘சென்னையில் ஏகப்பட்ட ட்ரீட்மெண்ட் இருக்கிறது. பாங்காங்கில் இருக்காது’என கூறினார். இப்படி ஒட்டுமொத்த பாலிவுட்டையும் இப்போது தன் பக்கம் ஈர்த்திருக்கிறார் ஸ்ருதிகா. இதனால் இவர் ஒரு பேன் இந்தியா எண்டெர்டெயினராக வலம் வருவதாக சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறார் ஸ்ருதிகா.

Next Story