ஆஸ்பிட்டல் வார்டு பாயா விஜய், அஜீத் படத்துக்கு பைட் மாஸ்டர்...? யாருப்பா அவரு?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:37:53  )

தன்னம்பிக்கையும், திறமையும் இருந்தால் ஒருவர் எந்த இடத்தில் இருந்தாலும் வாழ்வில் முன்னுக்கு வந்துவிடலாம். அதற்கு அவருக்கு வேண்டியது ஒன்று மட்டும் தான். கடின உழைப்பு. அவருடைய முகம், குரல் எல்லாம் அதற்கு பெரிய விஷயம் இல்லை.

இருக்குறதை வைத்து சிறப்பாகச் செய்தாலே மத்தவங்களுக்கு அது ரொம்பவும் பிடித்து விpடும். சிலரைப் பார்க்கும்போது இவரெல்லாம் எப்படி ஜெயித்தார்னு ஆச்சரியம் வரும். அதுக்குக் காரணம் இதுதான். அப்படிப்பட்ட ஒருவரைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

அனல் பறக்கும் சண்டைக்காட்சிகள் என்றாலே அது அஜீத், விஜய், சூர்யா, ஜெயம் ரவி, சிம்பு, விக்ரம் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராகப் பணிபுரிந்தவர் தான் ஸ்டண்ட் சில்வா. இவர் பல படங்களில் வில்லனாகவும், அவர்களின் அடியாளாகவும் வருவதை நாம் பார்த்திருப்போம்.

அவரது தலைமுடி தான் அவருக்கு பிளஸ் பாயிண்ட். அவர் பேசுற ஸ்டைலும், பார்க்குற பார்வையும் சிறுவர்கள் எல்லாம் பார்த்து விட்டால் குலைநடுங்கச் செய்து விடும். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தின்னு ரவுண்டு கட்டி பல படங்களுக்குப் பணியாற்றியுள்ளார். 2005ல் ராஜமௌலி இயக்கிய சத்ரபதி என்ற தெலுங்கு படத்தில் தான் இவர் அறிமுகம்.

சினிமாவில் நடனக்கலைஞராக சேர ஆர்வம் கொண்டு இருந்தார். அங்கு சங்கத்தில் அவரால் சேர முடியவில்லை. அதனால் ஸ்டண்ட் கலைஞர்களுக்குரிய சங்கத்துக்கு விண்ணப்பித்தார். ரன், திருமலை படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னிடம் உதவியாளராக பணியாற்றினார்.

சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஸ்டண்ட் மாஸ்டராக இருந்தார். அஜீத் நடித்த மங்காத்தா படத்தில் சேஸிங் காட்சி அவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தது. தலைவா, ஜில்லா, வீரம், என்னை அறிந்தால் ஆகிய படங்களில் யார்றா இவருன்னு நமக்கேக் கேட்கத் தோன்றியது.

ஆனால் ஆஜானுபாகுவான இவர் ஆரம்பத்தில் எங்கு வேலை பார்த்தார் என்பதைப் பார்த்தால் கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. ஸ்டண்ட் சில்வா சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி ஸ்டான்லி மருத்துவமனையில் வார்டு பாயாக பணியாற்றினாராம். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி. அங்குள்ள மருத்துவமனைகளிலும் பணியாற்றியுள்ளார். இது எத்தனை பேருக்குத் தெரியும்?

Next Story