என்னோட எனர்ஜிக்கு அஜித்தான் காரணம்! அனிருத் பகிர்ந்த சீக்ரெட்..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:19  )

தமிழ் சினிமாவில் அஜித் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீப காலமாக வெளியாகும் அஜித்தின் படங்களுக்கு பெரும்பாலும் அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.

அஜித் அனிருத் இணையும் கூட்டணி இன்று வரை ஒரு வெற்றி கூட்டணியாகவே அமைந்திருக்கிறது. வேதாளம் விவேகம் அதனை தொடர்ந்து குட் பேட் அக்லி திரைப்படம் பெரிய அளவில் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அஜித்தை பற்றி அனிருத் கூறிய ஒரு தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

அட்டகாசம் திரைப்படத்திற்கு பிறகு தான் அஜித்தின் பெரிய ஃபேனாக மாறினாராம் அனிருத். அதிலிருந்தே அஜித்தை மிகவும் பிடிக்கும் என கூறி இருக்கிறார். அதிலும் வேதாளம் திரைப்படத்தில் இசை அமைக்கக்கூடிய வாய்ப்பு தனக்கு கிடைத்தது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் அதனைத் தொடர்ந்து விவேகம் படத்திலும் வாய்ப்பு கிடைத்தது.

அவர் படத்தில் இசையமைத்த பாடல்கள் அனைத்துமே பெரிய அளவில் ஹிட்டாகியது. இப்போது குட் பேட் அக்லி திரைப்படத்திலும் இசையமைக்கக்கூடிய வாய்ப்பு தனக்கு கிடைத்திருக்கிறது. நான் பாடல்களை கம்போஸ் செய்த பிறகு ஒவ்வொரு முறையும் அஜித் எனக்கு தொலைபேசியில் அழைத்து சூப்பராக இருக்கிறது என கூறுவார்.

இவரின் இந்த பாராட்டு தான் அடுத்தடுத்து நான் உற்சாகமாக பணியாற்றுவதற்கு ஒரு காரணம் என அனிருத் கூறி இருக்கிறார். பொதுவாக அஜித் ரஜினி போன்ற நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த பாடல்கள் அனைத்துமே பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது.

ஆனால் கமலுக்காக இந்தியன் 2 படத்தில் அனிருத் இசையமைத்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. ஆனால் வேட்டையன் படத்தில் மனசிலாயோ பாடல் எந்த அளவு ரீச் ஆனது என அனைவருக்கும் தெரிந்திருக்கும். சினிமாவுக்கு மட்டுமல்ல பல வெளிநாட்டு கச்சேரிகளிலும் அனிருத் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

அவருடைய லைன் அப்பில் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன. பெரிய பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத்ததான். அந்த அளவுக்கு இசையில் பெரிய ஆளுமையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார் அனிருத்.

Next Story