விஜயே கதினு இருந்தவருக்கு லம்பா ஒரு ஆஃபரை கொடுத்த அஜித்! இனிமேதான் பாக்க போறோம் ஆட்டத்த
தமிழ் சினிமாவில் விஜய் அஜித் என இரு பெரும் நடிகர்கள் இந்த கோலிவுட்டையே கலக்கி வருகிறார்கள். எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என இந்த மாபெரும் நட்சத்திரங்களுக்கு அடுத்த நிலையில் இவர்கள் இருவரும் தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இருவருக்குமே இணையான ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர்.
விஜய் அஜித் படங்கள் ரிலீஸ் சமயத்தில் ரசிகர்களின் ஆட்டத்திற்கு ஒரு அளவே இல்லை. அந்த அளவுக்கு ஒரு திருவிழாவைப் போல இவர்களின் படங்களை மிக விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். தொழில் முனையில் இவர்களுக்கு இடையில் ஒரு பலமான போட்டி இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் இருவரும் நண்பராகவே பழகி வருகிறார்கள்.
ஆரம்பத்தில் இருந்தே இப்போது வரைக்கும் இவர்களும் சரி இவர்களுடைய குடும்பங்களும் சரி ஒரு நண்பர்களைப் போலவே பழகி வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் இந்த படத்தின் மீது அதிக அளவு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏற்கனவே அருண் விஜயின் மார்க்கெட் சரிந்த நிலையில் அவருக்கு ஒரு நல்ல படத்தை கொடுத்து அருண் விஜயை மீட்டுக் கொடுத்தவர் மகிழ்திருமேனி என்பது அனைவருக்கும் தெரியும்.
அப்படிப்பட்டவருக்கு அஜித் போன்ற மாபெரும் நடிகர்கள் கையில் கிடைத்தால் எப்பேர்ப்பட்ட படத்தை கொடுப்பார்கள் என அனைவரும் எதிர்பார்த்து வருகிறார்கள். ஆனால் அருண் விஜயின் படத்தை பார்த்த விஜய் மகிழ்திருமேனியிடம் நாம் சேர்ந்து படம் பண்ணலாம் என சொன்னதாகவும் விஜய்யிடம் இரண்டு கதைகளை மகிழ் திருமேனி சொன்னதாகவும் வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
அந்த இரு கதைகளும் விஜய்க்கு பிடித்து போக அதில் ஏதாவது ஒரு கதை நாம் எடுத்து பண்ணலாம் என விஜய் கூறினாராம். ஆனால் அந்த நேரத்தில் மகிழ்திருமேனி உதயநிதியை வைத்து கழகத் தலைவன் என்ற படத்தில் கமிட்டாக விஜயுடன் சேர்ந்து படம் பண்ணாமல் போனது. விஜயை வைத்து ஒரு நல்ல வாய்ப்பு வந்த நிலையில் இப்படி மிஸ் ஆகிவிட்டதே என வருத்தத்தில் இருந்த மகிழ்திருமேனிக்கு ஒரு பெரிய ஆஃபராக வந்தது தான் அஜித்தை வைத்து எடுக்க போகும் விடாமுயற்சி திரைப்படத்தின் கதை.
ஆனால் மகிழ்திருமேனியை முதலில் லைக்காதான் அழைத்து பேசியிருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் சுமூகமான பேச்சு வார்த்தை வளர அதன் பிறகு தான் அஜித்தை அனுகியிருக்கிறார்கள். இவ்வாறு வலைப்பேச்சு அந்தணன் அந்த ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.