இதுக்கு ஒரு எண்டு கார்டே இல்லையா? அஜித் கண்டிப்பாக இதுக்கு பதில் சொல்லியே ஆகணும்!..

by ராம் சுதன் |

கோலிவுட்டில் அஜித் ஒரு மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். தற்போது விடா முயற்சி திரைப்படத்திலும் குட்பேட் அக்லி திரைப்படத்திலும் ஒரே நேரத்தில் இரு படத்தின் படப்பிடிப்புகளிலும் கலந்து கொண்டு வருகிறார் அஜித். இதைப் பற்றி சமீபத்தில் அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா ஒரு பத்திரிக்கை பேட்டியில் ‘ஒரு நாளைக்கு 20 மணி நேரம் கடுமையாக உழைக்கிறார் அஜித் என்றும் கடந்த ஐந்து நாட்களாகவே தூக்கம் இல்லாமல் இருக்கிறார்’ என்றும் கூறியிருந்தார்.

அதற்கு காரணம் அவருடைய விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் தான். எப்படியாவது விடாமுயற்சி திரைப்படத்தை தீபாவளி அன்று ரிலீஸ் செய்து விட வேண்டும் என்ற குறிக்கோளில் இருக்கிறார் அஜித். அவரைப் பொறுத்த வரைக்கும் அவர் ஒன்றை நினைத்து விட்டால் அது கண்டிப்பாக நடக்க வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருப்பார்.

இந்த நிலையில் அஜித்தை பற்றி பல விமர்சனங்கள் இணையதளத்தில் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அதில் சமீபத்தில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அஜித் 35 கோடி நிதி உதவியாக கொடுத்திருக்கிறார் என்ற ஒரு செய்தி அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏனெனில் மலையாளத்தில் சூப்பர் ஸ்டார்களாக இருக்கும் நடிகர்கள் இந்த அளவு தொகையை நிதியுதவியாக கொடுக்காத பட்சத்தில் அஜித் மட்டும் எப்படி இவ்வளவு தொகையை கொடுத்திருப்பார் என்ற வகையில் அனைவரும் இதைப் பற்றி பேசிக்கொண்டிருக்க இது முற்றிலும் பொய் என வலைபேச்சு அந்தணன் கூறி இருக்கிறார்.

ஆனால் இந்த செய்தி பரவியதிலிருந்தே இது கண்டிப்பாக வதந்தியாக தான் இருக்கும் என அனைவராலும் நம்பப்பட்டது. ஏனெனில் அஜித்தை பொருத்தவரைக்கும் ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் அது அவரே நேரடியாக உதவி தேவைப்படுவோருக்கு கண்டிப்பாக செய்துவிடுவார். இப்படி முதலமைச்சர் நிதியின் கீழ் தொகையை கொடுத்து உதவி செய்ய வேண்டும் என எப்பொழுதுமே அவர் நினைக்க மாட்டார்.

ஏன் தமிழகத்தில் கூட சமீபத்தில் நடந்த வெள்ள பாதிப்பில் கூட அஜித் உதவவில்லை. அப்படி இருக்கும்போது வயநாடு நிலச்சரவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி இந்த அளவு தொகையை கொடுத்திருப்பார் என அந்தணன் கூறினார். மேலும் இது அஜித்தை பிடிக்காதவர்கள் செய்த செயலாக கூட இருக்கலாம் என்றும் கூறினார். ஏனெனில் அஜித்தை பற்றி இப்படி ஒரு வதந்தியை கிளப்பிவிட்டால் அனைவரும் பார்த்து கிண்டல் பண்ணுவார்கள். அஜித் பற்றி நக்கல் அடித்து பேசுவார்கள் என்ற ஒரு காரணத்தினால் கூட யாரோ ஒருவர் செய்த செயலாக இது இருக்கலாம்.

ஆனால் கண்டிப்பாக அஜித் ரசிகர்கள் செய்திருக்க மாட்டார்கள். அதனால் இது போன்ற செய்தி இனிமேல் வராமல் இருக்க அஜித் ஒரு அறிக்கையை கண்டிப்பாக விடவேண்டும். அதில் ‘என் சம்பந்தப்பட்ட எந்த ஒரு தகவலானாலும் அது என்னுடைய மேலாளரும் நண்பருமான சுரேஷ் சந்திராவிடம் இருந்து மட்டுமே வெளியாகும். மற்றபடி வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்’ என்ற ஒரு அறிக்கையை அவர் வெளியிட வேண்டும். அப்பொழுதுதான் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அந்தணன் கூறினார்.

Next Story