60 குழந்தைகளுக்காக விமானம்? தன் சொந்த செலவில் அஜித் செய்த அந்த விஷயம்

Published on: November 7, 2024
---Advertisement---

தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கான ரசிகர் பட்டாளத்துடன் கெத்தாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருக்கு என ஒரு தனி மார்கெட் சினிமாவில் இருக்கிறது. இவருடைய படங்களுக்கு என நல்ல ஒரு ஓப்பனிங்கும் இருந்து வருகிறது.

விஜய்க்கு இணையான ரசிகர் பலத்துடன் அவருக்கு சரியான போட்டி நடிகராக இருப்பவர் அஜித். ஆரம்பத்தில் ஏகப்பட்ட போராட்டங்களை சந்தித்து இப்படியான ஒரு அந்தஸ்தை அடைந்திருக்கிறார்.

எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் தன் சொந்த முயற்சியாலும் கடின உழைப்பாலும் இந்த இடத்தை அடைந்திருக்கிறார் அஜித். யாரைப் பற்றியும் எந்த ஒரு அவதூறும் பேசாதவர். தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர்.

குடும்பத்திற்கு பெரிய அளவு முக்கியத்துவம் கொடுப்பவர். அதே நேரம் அவருடைய பொழுதுபோக்கிற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர். இப்படி பல விஷயங்களை தனக்கேற்றபடி அமைத்துக் கொண்டு வாழ்க்கையை எளிதாக கொண்டு போகிறார் அஜித்.

அஜித்தை பொறுத்தவரைக்கும் பல பேர் பலவிதமான விமர்சனங்களை முன் வைத்தாலும் அவரை பற்றி தெரியாத பல விஷயங்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. ஏற்கனவே அஜித் யாருக்கும் தெரியாமல் பல பேருக்கு உதவிகளை செய்து வருகிறார் என அனைவரும் அறிந்ததே.

அஜித்தை பொறுத்தவரைக்கும் உதவி வேண்டும் என சொல்கிறவர்களுக்கு நேரடியாக கையில் காசு கொடுக்கமாட்டாராம். அவருக்கு என்ன மாதிரியான மருத்துவ உதவிகள் வேண்டுமோ அதை அஜித் சொல்லும் மருத்துவமனையில் சேர்ந்து கொள்ள வேண்டுமாம்.

அதன் பிறகு சம்பந்தப்பட்டவருக்கு தேவையான மருத்துவச் செலவுக்கான பணத்தை மருத்துவமனையிலேயே கட்டி விடுவாராம் அஜித். அதைப் போல கடந்த 2000 ஆம் ஆண்டு 60 குழந்தைகளை தனதுசொந்த செலவில் விமானத்தில் அழைத்து சென்று அழகு பார்த்தாராம் அஜித். இந்த விஷயம் பெரும்பாலும் யாருக்கும் தெரியாத ஒன்று.இதுதான் இப்போது வைரலாகி வருகின்றது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment