குட் பேட் அக்லியில் இணைந்த பிரபலம்... கைதி, மாஸ்டர்னு பின்னிப் பெடல் எடுத்தவர் ஆச்சே..!
அஜீத்தின் விடாமுயற்சி படம் சூட்டிங் இழு இழுன்னு இழுத்துக் கொண்டே போகிறது. படம் இப்போ வருமா? எப்போ வருமோ என்ற கதையாகத் தான் இருக்கிறது. அது தல க்கே வெறுப்பாகி விட்டது போல. இப்போ அவர் குட்பேட் அக்லி முதல்ல வந்தாலே போதும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டார்.
அதனால் அந்த டீமை கொஞ்சம் வேகமா வேலையை முடிங்கப்பான்னு உசுப்பேத்தி விட்டுருக்காராம். இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...
விடாமுயற்சி படத்துக்கு இன்னும் 8 நாள் சூட்டிங் இருக்காம். அதுவும் எல்லா நடிகர்களும் இருக்குற மாதிரியான சீன் 5 நாள் பாக்கி இருக்கு. 3 நாள் ஒரு பாடல் காட்சி பாக்கி இருக்கு. அதனால அதைப் பொங்கலுக்குக் கொண்டு வர முடியுமாங்கறது சந்தேகம் தான். அதைக் கொண்டு வர முடியலன்னா குட் பேட் அக்லியைக் கொண்டு வந்துருங்கங்கறதுல அஜீத் உறுதியா இருக்காரு.
இப்போ ஸ்பெயின் சூட்டிங்ல தான் இருக்கு. குட் பேட் அக்லி படத்துக்கு இன்னும் 25 நாள் சூட்டிங் பாக்கி இருக்கு. அது நான் ஸ்டாப்பிங்கா நடக்கப் போகுது. தீபாவளிக்குக் கூட அவர் அங்க தான் இருப்பாரு. சென்னைக்கு வர்றது சந்தேகம்தான்னு சொல்றாங்க.
அஜீத் குட் பேட் அக்லி டீம்கிட்ட கொஞ்சம் ஃபாஸ்ட்டா ஒர்க் பண்ணிடுங்க. எப்படியாவது நீங்க வந்துட்டா சந்தோஷம் தான்னு சொல்லிருக்காராம்.
அஜீத்தைப் பொருத்தவரைக்கும் அந்தப் படம் வர்றதுல ரொம்ப உறுதியா இருக்காருன்னு சொல்றாங்க. அந்தப் படத்துல அர்ஜூன்தாஸ்சும் இணைந்துள்ளாராம்.
முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரைப் பொருத்தவரைக்கும் ஹீரோவாகவும் பண்றாரு. இன்னொரு பக்கம் வில்லனாகவும் பண்றாரு. 'ஒன்ஸ்மோர்' என்ற படத்துல ஹீரோவா நடிச்சிக்கிட்டு இருக்காராம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அப்படின்னா தல ரசிகர்களுக்கு இது தல தீபாவளி கிடையாது. தல பொங்கலாவது வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.