அஜித்துக்கு மலையாளம் தெரியும்னு தெரியாம அப்படி பேசிட்டேன்! பிரபலம் சொன்ன ஷாக் தகவல்

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் ஒரு ஹேண்ட்சமான நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித் அதே நேரத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடித்துவருகிறார். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 21 மணி நேரம் இரு படங்களின் படப்பிடிப்பிற்காக தன் நேரத்தை அஜித் செலவிடுவதாக தற்போதைய செய்திகள் கூறுகின்றன.

அஜித்தை பொறுத்தவரைக்கும் விடாமுயற்சி திரைப்படத்தை எப்படியாவது தீபாவளிக்கு ரிலீஸ் செய்து விட வேண்டும் என்ற குறிக்கோளில் இருக்கிறார். மேலும் இந்தப் படம் ஆரம்பித்ததில் இருந்து இப்போது வரை ஏதாவது ஒரு பிரச்சினையை சந்தித்துதான் வருகிறது.

இதற்கிடையில் யாரும் எதிர்பாராத விதமாக விடாமுயற்சி படத்தில் கலை இயக்குனராக பணியாற்றிய மிலனின் மறைவு ஒட்டுமொத்த படக்குழுவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக அஜித்தை மிகவும் பாதித்தது. ஏனெனில் அஜித்தும் மிலனும் நெருங்கிய நண்பர்கள்.

இந்த நிலையில் பிரபல காஸ்டியூம் டிசைனர் தக்‌ஷா ஒரு பேட்டியில் இதை பற்றி கூறும் போது மிலனின் மறைவு ஒரு பக்கம் விடாமுயற்சி படக்குழுவையும் இன்னொரு பக்கம் கங்குவா படக்குழுவையும் பாதித்தது என்று கூறினார். ஏனெனில் இரு படங்களுக்கும் மிலன் தான் கலை இயக்குனர். அதுவும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் போதுதான் மிலன் இறந்தார்

அதனால் அவருடைய பாடியை இந்தியா கொண்டு வர மிகவும் சிரமப்பட வேண்டிருந்தது. ஆனால் அதற்கு அஜித்தான் மிகவும் உதவியாக இருந்தார். அவரால்தான் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் மிலன் பாடி இந்தியா வந்தது என காஸ்டியூம் டிசைனர் தக்‌ஷா கூறினார்.

மேலும் தக்‌ஷா இன்னொரு விஷயமும் பகிர்ந்திருந்தார். தக்‌ஷாவை பொறுத்தவரைக்கும் சினிமாவிற்குள் வருவதற்கு முன் தக்‌ஷா மாடலிங்கில் டிசைன் செய்து கொண்டிருந்தாராம்.அஜித்துக்கு அமராவதி படத்தில் டிசைன் செய்ததே தக்‌ஷாதானாம். அந்தப் படத்தின் ஒரு ஷூட்டுக்காக அஜித்தை போட்டோ எடுத்துக் கொண்டிருந்தாராம் தக்‌ஷா.

அப்போது அஜித்துக்கு மலையாளம் தெரியாது என நினைத்து தக்‌ஷா மலையாளத்திலேயே தன்னருகில் இருந்தவரிடம் ‘ஆளு சூப்பரா இருக்காரு. இவரை நம் மாடலுக்கு யூஸ் பண்ணா செமயா இருக்கும்’ என கூறியிருக்கிறார். ஏனெனில் அந்த சமயத்தில் மாடல்களையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு அஜித் ஸ்மார்ட்டா இருந்தார் என தக்‌ஷா கூறினார்.

இந்த சம்பவம் நடந்த அடுத்த நாள்தான் தக்‌ஷாவிற்கு ‘அஜித்துக்கு மலையாளம் தெரியும்’ என்ற விஷயம் தெரியவந்ததாம். அதனால் அடுத்த நாள் சூட்டுக்கு தக்‌ஷா அங்கு வராமல் காணாமல் போய்விட்டாராம். இந்த விஷயத்தை அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா இப்போது வரை சொல்லி கிண்டல் செய்து கொண்டிருப்பாராம்.

Next Story