நண்பனிடம் டிரெஸ் கடன் வாங்கி நடிக்கப் போன அஜித்!.. இதெல்லாம் சொல்லவே இல்லையே!....
பைக் ஓட்டுவது மற்றும் மாடலிங் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்த அஜித்தை நீ சினிமாவில் நடி என உசுப்பேத்திவிட்டது அவரின் நண்பர்கள்தான். அப்படித்தான் பிரேம புஸ்தகம் என்கிற தெலுங்கு படத்தில் நடித்தார். இந்த வாய்ப்பு கூட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ரெக்கமண்ட் செய்ததால் வந்தது.
பிரேம புஸ்தகம் படத்திற்கு பின் அமராவதி படத்தில் நடித்தார் அஜித். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சங்கவி நடித்திருந்தார். இதுதான் சங்கவி அறிமுகமான முதல் திரைப்படம். இந்த படத்திற்கு பின்னர்தான் அவர் விஜயுடன் நடிக்க துவங்கினார். துவக்கத்தில் விஜய் நடித்த பல படங்களில் அவருக்கு ஜோடியாக சங்கவி நடித்தார்.
அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். அஜித்துக்கு சாக்லேட் பாய் முகம் என்பதால் தொடர்ந்து காதல் கதைகளில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் ஆக்ஷன் படங்களில் நடித்து தனது இமேஜை மாற்றினார். அதுவும் பில்லா படத்தின் ரீமேக்கில் நடித்து மாஸ் ஹீரோவாகவும் மாறினார்.
இப்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக மாறியிருக்கிறார் அஜித். இவரின் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். பல தடைகளை தாண்டி இப்படம் விரைவில் முடியவடையவிருக்கிறது.
இப்போது அஜித் 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார். ஆனால், அவரின் துவக்க காலம் அப்படி இல்லை. அவராக சென்று பல இயக்குனர்களிடமும் வாய்ப்பு கேட்டிருக்கிறார். பல அவமானங்களையும் சந்தித்திருக்கிறார். பல தோல்விப்படங்களை கொடுத்திருக்கிறார். முதுகுக்கு பின்னால் பலரும் குத்தி இருக்கிறார். இதையெல்லாம் தாண்டித்தான் அஜித் வளர்ந்திருக்கிறார்.
விளம்பர படங்களில் நடிக்கும் போது அவரிடம் நல்ல உடை கூட கிடையாது. எஸ்.பி.பி மகன் சரணும், அஜித்தும் ஒன்றாக படித்தவர்கள் மற்றும் நண்பர்கள். அஜித் சில விளம்பர படங்களில் நடித்தபோது அதில் அணிந்து நடிக்க உடைகளை சரணிடமிருந்துதான் வாங்கி செல்வாராம். இப்படியெல்லாம் நடித்துதான் சினிமாவில் அஜித் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.