அஜித்தோட லட்சியமே அதுதான்!.. செம மேட்டரா இருக்கே!.. பிரபலம் சொன்ன தகவல்!...

by ராம் சுதன் |

Ajithkumar: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். அமராவதியில் துவங்கிய கலைப்பயணம் இன்னமும் நிற்கவில்லை. 30 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். துவக்கத்தில் சாக்லேட் பாயாக நடித்து வந்த அஜித் ஒரு கட்டத்தில் ஆக்‌ஷன் ரூட்டுக்கு மாறி இப்போது மாஸ் நடிகராகவும் மாறியிருக்கிறார்.

சினிமாவில் நடிப்பு தொழில் என்றாலும் அஜித்தின் ஆர்வமெல்லாம் விளையாட்டின் மீதுதான். அதனால்தான் பைக், கார் ஓட்டுவது, அது தொடார்பான போட்டிகளில் கலந்து கொள்வது என ஆர்வம் காட்டினார். உடம்பில் பல அறுவை சிகிச்சைகள் செய்யப்படவே போட்டிகளில் கலந்து கொள்வதை நிறுத்திவிட்டார்.

ஆனாலும், ரிமோட் ஹெலிகாப்டரை இயக்குவது, துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொள்வது, பைக்கை எடுத்துக்கொண்டு ஊர் ஊராக போவது என்கிற அவரின் ஆர்வம் நிற்கவில்லை. அது இன்னமும் தொடந்து கொண்டே இருக்கிறது. அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே.

அவர் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘அஜித்துக்கு சினிமாவை விட விளையாட்டில் அதிக ஆர்வம் உண்டு. விளையாட்டு மட்டுமே ஒருவனை உற்சாக வைத்திருக்கும் என அவர் திடமாக நம்புகிறார். அவரின் ரசிகர்களும் ஏதேனும் ஒரு விளையாட்டில் ஆர்வமாக இருக்க வேண்டும் என அவர் ஆசைப்படுகிறார்.

எதிர்காலத்தில் ஒரு விளையாட்டு அகாடமி தொடங்க வேண்டும் என்பதுதான் அவரின் குறிக்கோளாக இருக்கிறது. விளையாட்டு மூலம் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என அவர் ஆசைப்படுகிறார். இதை என்னிடம் அவர் சொல்லி இதை ஊடகங்களில் சொல்லுங்கள் என்றும் அவர் சொன்னார்’ என பாண்டே தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே பைக்கில் உலக பயணம் செய்ய விரும்புவர்களுக்காக ஒரு நிறுவனத்தை அஜித் தொடங்கினார். எதிர்காலத்தில் இதுபோல இன்னும் பல விஷயங்களை அவர் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story