செல்ஃபிக்குனே பொறந்தவருப்பா! அடுத்தடுத்து ஸ்டைலான லுக்கில் கலக்கும் அஜித்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:35:55  )

தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். தற்போது அவருடைய செல்ஃபி புகைப்படங்கள்தான் இணையம் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றது. இதுவரை அஜித்தின் புகைப்படமோ வீடியோவோ வெளிவராத நிலையில் சமீபகாலமாக அவர் சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதுவும் அஜித்தே செல்ஃபி எடுக்கும் மாதிரியான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல ஒரு ரெஸ்பான்ஸை பெற்று வருகிறது.

இன்று அஜித் ஒரு ரசிகையிடம் வீடியோகாலில் பேசுவது மாதிரியான வீடியோவும் வைரலானது. அதோடு கருப்பு நிற டீ சர்ட்டில் படு ஸ்டைலான லுக்கில் கூலிங் க்ளாஸ் அணிந்தவாறு அஜித் கொடுத்த போஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மேலும் சில புகைப்படங்கள் அடுத்தடுத்து வந்தவண்ணம் இருக்கின்றன.

அதில் ஹெலிகாப்டரில் இருக்கும் மாதிரியான புகைப்படமும் அவருடைய அலுவலகத்தில் ஸ்டைலாக உட்கார்ந்த மாதிரியும் அந்த புகைப்படத்தில் போஸ் கொடுத்திருக்கிறார். அவருடைய விடாமுயற்சி படத்தை பற்றிய அப்டேட்டை கேட்டு வரும் ரசிகர்களுக்கு இது ஒரு ஆறுதலாகவே இருக்கும்.

மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அஜித்தே கடவுளே என்றும் கமெண்டில் கூறி வருகிறார்கள். கடவுளை அடிக்கடி பார்க்க மாட்டோம். யாராவது ஒருவரின் ரூபத்தில்தான் பார்ப்போம். அப்படித்தான் அஜித்தை அவரது ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

விடாமுயற்சி படத்திற்கு பிறகு அஜித்தின் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் மீது அவரது ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள்.

Next Story