வாவ்.. அஜித்தின் புதிய காரா இது? போட்டோவை வெளியிட்டு மாஸ் காட்டிய தல
தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். என்னதான் சினிமாவில் ஒரு பெரிய நட்சத்திரமாக ஜொலித்தாலும் மற்றவர்களை போல் சாதாரண மனிதராக தன் வாழ்க்கையை தன் இஷ்டத்துக்கு வாழ ஆசைப்படும் ஒரு நபராக இருக்கத்தான் அஜித் ஆசைப்படுகிறார். ஆனால் அவருக்கு இருக்கும் மாஸ் அவரை அவர் நினைப்பது போல இருக்க விடவில்லை.
ஏனெனில் அந்தளவுக்கு அஜித்துக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். இதனாலேயே அவர் அடிக்கடி வெளி நாடு சென்று அங்கு அவருடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். தெருவோர கடைகளில் அவருக்கு சாப்பிடுவது பிடிக்கும். ரோட்டோரங்களில் அவருக்கு அமருவது பிடிக்கும்.
ஆனால் இதையெல்லாம் இங்கு அவரால் பண்ண முடியாது. இதனால்தான் வெளி நாடு பயணமாக அடிக்கடி சென்று விடுகிறார். அங்கு ஹோட்டலில் சாப்பிடுவது, பைக் பயணம் செல்வது என தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
சினிமாவை தாண்டி அஜித் ரேஸில் ஆர்வம் காட்டக் கூடியவர் எனனைவருக்கும் தெரியும். சமீபத்தில் கூட பல இடங்களுக்கு பைக்கிலேயே அவர் சுற்றுப்பயணம் செய்திருந்தார். இந்த நிலையில் அஜித்தின் ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது,
அஜித் ஒரு புதிய காரோடு நிற்கும் புகைப்படம் தான் அது. மிகவும் விலையுயர்ந்த காரான Ferrari SF90 Stradale காரோடு அவர் போஸ் கொடுக்கும் மாதிரியான புகைப்படம்தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. அதன் விலை கிட்டத்தட்ட 7.50 கோடி என்றும் சொல்லப்படுகிறது. அது அஜித்தின் புதிய காராக இருக்குமோ என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
சிவப்பு நிற கார் அருகில் கீழே உட்கார்ந்த மாதிரி அஜித் போஸ் கொடுத்திருக்கிறார். அது ரசிகர்களிடையே மிகவும் டிரெண்டாகி வருகிறது. மேலும் அஜித் இப்போது அஜர்பைஜானில் சூட்டிங்கை முடித்து விட்டு அடுத்ததாக ஐதராபாத்தில் நடக்கும் கடைசி கட்ட செட்யூலில் கலந்து கொள்ள இருக்கிறார்.