அஜித் இத அனுமதிக்கலைனா வந்திருக்குமா? விடாமல் அடிக்கும் தல.. ரசிகர்களின் பல்ஸ இப்போதான் புடிச்சிருக்காரு

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக இருந்து வருபவர் நடிகர் அஜித். தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

எப்படியாவது விடாமுயற்சி திரைப்படத்தை இந்த ஆண்டு ரிலீஸ் செய்து விட வேண்டும் என்ற முனைப்பில் ஒட்டுமொத்த படக்குழுவும் மும்முரமாக அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குட் பேட் அக்லி படத்தை பொறுத்த வரைக்கும் அடுத்த வருடம் பொங்கல் அன்று ரிலீஸ் என சொல்லப்பட்டிருக்கிறது.

இதற்கு இடையில் எந்த ஒரு படத்திற்கும் பிரமோஷனுக்கு வராத அஜித் மறைமுகமாகவே பிரமோஷன் செய்து வருகிறார் என பிரபல சினிமா தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். சமீப காலமாக இந்தியன் 2 படத்திற்காக இறங்கி வேலை செய்யும் கமலை பற்றி தான் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.

ஒவ்வொரு பிரமோஷனிலும் வித்தியாசமான ஒரு யுத்தியை கையாண்டு தன்னுடைய இந்தியன் 2 படத்தை பெரிய அளவில் கொண்டு போக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் கமல். இதைப் பற்றி கூறிய தனஞ்ஜெயன் கமலின் இந்த ஒரு ஈடுபாடு அடுத்தகட்ட தலைமுறை நடிகர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் என கூறினார்.

சமீபத்தில் கூட நேசிப்பாயா படத்திற்கு நயன்தாரா ஒரு சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்டார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷ் முரளி நடிக்கும் திரைப்படம் நேசிப்பாயா. நயன்தாரா தன்னுடைய சொந்த படத்திற்கு பிரமோஷனுக்கு வராதவர்.

இந்த படத்திற்கு வந்து ப்ரொமோட் செய்ததில் அந்தப் படத்தைப் பற்றிய ஹைப் பெரிய அளவில் சென்றுவிட்டது. இதைப் பற்றியும் தனஞ்ஜெயன் இந்த படத்திற்கு இவ்வளவு ஹைப் என்றால் நீங்கள் நடித்த படத்திற்கு பிரமோஷன் செய்தால் எந்த அளவு மக்கள் மத்தியில் ரீச் ஆகும் என்பதை நினைத்து பாருங்கள் நயன் என ஒரு வேண்டுகோளை விடுத்தார்.

அது மட்டும் அல்லாமல் அஜித்தும் தன்னுடைய படத்தை மறைமுகமாக ப்ரொமோட் செய்து கொண்டிருக்கிறார். விடாமுயற்சி படத்தில் எடுக்கப்படும் சண்டைக்காட்சிகளின் வீடியோவை அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டே வருகின்றனர். இது அஜித்தின் அனுமதியில்லாமல் வெளியாகுமா ?ஒரு வேளை அவர் வேண்டாம் என சொல்லி இருந்தால் கண்டிப்பாக இந்த வீடியோ வெளியாகி இருக்காது.

அதனால் இதுவும் ஒரு வகையான ப்ரொமோஷன் தான். விடாமுயற்சி படத்திற்காக விடாமல் அடித்துக் கொண்டிருக்கிறார் அஜித் என தனஞ்ஜெயன் கூறி இருக்கிறார்.

Next Story