எல்லாமே என் மகனுக்காக.. ஷாலினி அஜித் எங்க போயிருக்காங்க தெரியுமா..? வைரல் போட்டோ..!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:40:40  )

தமிழ் சினிமாவில் பிரபல ஜோடியாக வலம் வருபவர்கள் ஷாலினி மற்றும் அஜித். அமர்க்களம் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு நடிகை ஷாலினி சினிமாவை விட்டு விலகி முழு நேரமும் குடும்பத்தை கவனித்து வருகின்றார்.

கடந்த 2000 ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறந்தது. இவர்களுக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது. அவரின் பெயர் அனோஷ்கா. அதையடுத்து சில ஆண்டுகளுக்கு பின்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. ஆண் குழந்தைக்கு ஆத்விக் அஜித் குமார் என்று பெயரிடப்பட்டிருக்கின்றது. மகள் அனோஷ்கா அஜித்தை போல இருப்பதாகவும், மகன் ஆத்விக் பார்ப்பதற்கு ஷாலினியை போல இருப்பதாக பலரும் கூறுவார்கள்.

சமீபத்தில் கூட நடிகர் அஜித் தனது மகன் ஆத்விக்குடன் கிரிக்கெட் விளையாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. பொதுவாக அஜித்தை பொருத்தவரையில் என்னதான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் குடும்பத்தோடு நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றார்.

ஒரு படத்தை முடித்துவிட்டு மற்றொரு படம் தொடங்குவதற்கு முன்பு குடும்பத்துடன் எங்கேயாவது ட்ரிப் சென்று விடுவார். ஷாலினிக்கு சமீபத்தில் தான் அறுவை சிகிச்சை ஏற்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். அடுத்ததாக குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவரின் மகன் ஆத்விக்கு எப்போதும் கால்பந்து போட்டி மீது அதிக ஆர்வம் கொண்டவர். தனது பள்ளிகளில் கால்பந்து போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடிய புகைப்படம் கூட இணையத்தில் வெளியானது. மேலும் ரியல் மேட்ரிக் அணியின் தீவிரமான ரசிகராகவும் ஆத்விக் இருக்கின்றார். இன்று ரியல் மேட்ரிக் அணிக்கும் வில்லர் ரியல் அணிக்கும் ஸ்பெயின் நாட்டில் சாண்டியாகோ மைதானத்தில் போட்டி நடைபெறுகின்றது.

இந்த போட்டியை காண்பதற்காக ஆத்விக் தனது அம்மாவான ஷாலினியுடன் ஸ்பெயின் நாட்டிற்கு சென்று இருக்கின்றார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகை ஷாலினி பகிர்ந்து இருக்கின்றார். இந்த போட்டியில் ரியல் மேட்ரிக் அணி வெற்றி பெற்றது. இந்த சந்தோஷமான புகைப்படத்தை தனது மகனுடன் பகிர்ந்து இருக்கின்றார். தனது மகனுக்காக அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வு எடுத்து வரும் ஷாலினி ஸ்பெயின் நாட்டிற்கு சென்று போட்டியை பார்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story