ஆறா ரணங்கள்… 20 மணி நேர உழைப்பு!.. அஜித்குமாரின் அடுத்த மூவ் இதுதான்… ஷாக் நியூஸ் சொன்ன சுரேஷ் சந்திரா
அஜித்குமார் குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் வரிசையாக வெளியாகி வரும் நிலையில் அடுத்து அவர் என்ன செய்ய இருக்கிறார் என்பது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா கூறும் போது, அஜித்தை பொருத்தவரை உடனே ஒரு படத்தை ஒப்புக்கொள்ள மாட்டார். அவர் ஒரு கம்பெனியிடம் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தை முடித்துக் கொண்ட பின்னரே இன்னொரு கம்பெனியினை ஒப்புக்கொள்வார். அப்படி அஜித்திடம் பல வருடமாக வைக்கா நிறுவனம் ஒரு படத்திற்காக கேட்டுக் கொண்டிருந்தனர்.
அதைத்தொடர் விடாமுயற்சி படத்தில் நடிப்பதாக ஒப்பந்தமானது. ஆனால் அந்த நிறுவனம் ஒரே நேரத்தில் லால் சலாம், இந்தியன் 2 உள்ளிட்ட படங்களை தயாரித்து வந்தது. அதன் ரிலீஸில் அவர்கள் கவனம் செலுத்திய வேண்டியது முக்கியமாக போனது. அதுபோல படத்தில் நடிக்கும் நடிகர்களில் கால்ஷீட்களும் பிரச்சினை ஏற்பட்டது.
கடந்த பிப்ரவரியிலேயே முடிக்க வேண்டிய விடாமுயற்சி திரைப்படம் இதனால்தான் தொடர்ந்து தள்ளிப்போனது. இதனால் தற்போது கடந்த ஐந்தாம் தேதியில் இருந்து ஒரே நேரத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படத்திலும் நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் சூட்டிங் செய்து கொண்டிருக்கிறார். நள்ளிரவு 2 மணிக்கு ஹோட்டலுக்கு செல்பவர். காலை ஏழு மணிக்கு ஷூட்டிங் வந்து விடுகிறார்.
20 மணி நேரத்திற்கு முன்னர் எப்படி உழைத்தாரோ? அதேபோல தான் ஒப்புக்கொண்ட இரண்டு படங்களையும் முடிக்க வேண்டும் என்பதற்காக ஓடிக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் மூன்றாவது படங்கள் குறித்து நினைக்க வாய்ப்பே இல்லை. இது சூழ்நிலையால் நடந்த விஷயம் தான். விரைவில் விடாமுயற்சியின் சூட்டிங் முடிந்துவிடும்.
குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஷூட்டிங் டிசம்பருக்குள் முடிந்துவிடும். அதைத் தொடர்ந்து சில மாதங்கள் அஜித் ட்ரஸ்டில் இருக்க முடிவெடுத்து இருக்கிறார். இதனால் அதற்கு அடுத்த படத்தின் அறிவிப்புகள் வர மே மாதம் கூட ஆகிவிடும். அவருக்கு மூளையில் பிரச்சனை இருந்ததாக கூறப்படுவது உண்மை இல்லை.
ஒரு ஷூட்டிங் நடந்த பிரச்சினையால் ஆஞ்சியோகிராம் போன்ற ஒரு சின்ன ப்ரோசீஜர் மட்டுமே செய்யப்பட்டது. ஆபரேஷன் இருக்கும் அதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. அது முடிந்து அவருக்கு சில மாதங்கள் ஓய்வு கொடுக்க வேண்டும் என மருத்துவமனை அறிவுறுத்தி இருந்தது. ஆனால் அவர் 15 நாட்களில் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.
இதனால் தற்போது இரண்டு படங்களையும் முடித்துக் கொண்டு தன்னுடைய குடும்பத்துடன் அடுத்த சில மாதங்களே அவர் செலவழிக்க முடிவு செய்திருக்கிறார். அதனால் கேஜிஎஃப் பிரசாந்த் நீலுடன் படம் செய்ய இருக்கிறார் என்பது குறித்த தகவல்கள் குறித்து கூற இயலாது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.